பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 (Quilon} திருவனந்தபுர அரசனின் கொடுமை தாளாமல் சில நாயர் பிரபுக்கள் கப்பலில் ஏறி வடக்கு நோக்கி வந்தனர். அப்போது, ஒரிடத்தில் கரையில் புலியும் பசுவும் ஒன்று சேர்ந்து தண்ணிர் குடிப்பதைக் கண்டனர். அந்த அமைதியான இடத்தில் தாங்கள் கொண்டுவந்த குலதெய்வ மான பகவதியை வைத்து வழிபட்டனர். அந்த இடத் திற்குக் கொல்லம் என்று பெயரிட்டனர். கேரளத்திலே பகவதிக்குத் தலைமைப் பீடமாகக் கருதப்படும் கோயில் கொடுங்களூரில் உள்ளது. கண்ணகி மதுரையிலிருந்து சென்றடைந்த செங்குன்று, கொடுங்களுர் அருகில் உள்ள தாக அடியார்க்கு நல்லார் கூறினார். அவர் காலத்தில் (11-ஆம் நூற்றாண்டு) கொடுங்களுர் கோயில் இருந்திருக்க லாம். கொடுங்களூரில் உள்ள கிராம மக்களிடையே பகவதி யுடன் கண்ணகியைத் தொடர்புபடுத்திக் கூறும் கதை களோ நம்பிக்கையோ சிறிதும் காணப்படவில்லை. இக் கோயிலைப் பற்றி ஆராய்ந்த இந்துச்சூடன் என்ற ஆசிரியர் அடிகள் என்ற பூசாரிகள் இக்கோயிலில் தொழுவதைக் குறிப்பிட்டு அவர்களை இளங்கோவடிகளின் வழி வந்தவர் 3.65 storm 3.g663rpm if. (The secret chamber V. T. Induchudan published by Cochin Pevosom board) eggorno. இந்த ஊகம் வெறும் பெயரொற்றுமை காரணமாகக் கூறப்பட்டுள்ளதே ஒழிய உ று தி யா ன ஆதாரத்தில் எழவில்லை. இந்த அடிகள் என்ற சாதிப் பூசாரிகள், சாக் தேயப் பிராமணர்கள் என்று கருதப்படுவதைக் கவனிக்க வேண்டும். இவர்களிடையும் கண்ணகியின் கதையைத் தொடர்புபடுத்தும் நம்பிக்கை காணப்படவில்லை. அடிகள் என்ற பெயர்கள் சைனர்களும், சைவர்களும், பிறரும் துறவி களுக்கும் ஞானிகளுக்கும் வழங்கிய பெயர்கள் என்பதைத் .ே த வார த் தி லு ம் தமிழிலக்கியத்திலும் காணலாம். கேரளத்திலும் சில கோயில் பூசாரிகளுக்குத் தனித்தனிப் பெயர்கள் வழங்குவதைக் காணலாம் விஷாரி காவு கோயில் பகவதிக்கு இரத்தப் பலிச்சோறு படைக்கும் பூசாரிக்கு மூசாது' என்ற பெயர் வழங்கப்படு