பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2巻 கின்றது. இவன் கலப்பட நாயர் சாதியைச் சேர்ந்தவன், கண்ணனுாருக்கு அருகிலுள்ள பார்சினிக் கடலில் உள்ள முத்தப்ப்ன் தெய்வத்திற்கு (வேட்டைத் தெய்வம்) நடக்கும் வழிபாட்டிற்குப் பொறுப்பேற்று ந - த் து ம் தலைவனை “மடையன் என்றழைக்கின்றனர். இந்த மடையன் என்ற பட்டப் பெயரோடு ' இராமன் மடையன்’ என்ற பொறுப்பாளர் இன்றும் இருக்கின்றார். சிலப்பதி காரத்தில் மடையன் என்ற பெயர் முருகனுக்கு குன்றக் குரவையில் கூறப்படுவதைக் காணலாம். ஆனால்: பார்சினிக் கடலில் வழங்கும் பெயருடன் சிலப்பதிகாரத்தில் வழங்கும் மடையன் என்ற பெயரைத் தொடர்புபடுத்த முடியாது. கொடுங்களுர் பகவதி வழிபாட்டில் கண்ணகியின் கதை பெரும்பாலும் மறைந்துபோய் கிடக்கின்றது என்றே கருத வேண்டும். ஆனால், விஷாரிகாவு பகவதிக் கோயில் வழிபாட்டில் கண்ணகியின் கதை இன்றும் மறையாதிருப்பது மிகவும் வியப்பை அளிக்கின்றது. சில கேரள அறிஞர்கள் (காளி ஆராதனை - பத்மநாபமேனன் - மலையாளம்) கண்ணகியின் கதை கொடுங்களுருக்கு வடக்கே வழங்க வில்லை என்றும், அதனால் சேரநாடு வடக்கில் கொடுங் களூர் எல்லை வரைதான் இருந்தது என்றும் கருதினர். ஆனால், வடமலையாளத்தில் கண்ணகியின் கதையோடு தொடர்புபடுத்திய நம்பிக்கைகளும் கதைகளும் காணப் படுவதால் இந்தக் கருத்துத் தவறானது என்பது தெளி வாகும். விஷாரிகாவில் உள்ள பகவதியை இளைய பகவதி என்று கருதுகின்றனர். மூத்த பகவதி கொடுங்களூரில் உள்ளதாக ஐதீகம். சில கிராமங்களில் ஒரே காவில் மூத்த பகவதிக்கும் இளைய பகவதிக்கும் கோயில்கள் இருக்கின் றன. இந்தப் பகவதிகளில் இளைய பகவதி கூடுதலான சக்தி வாய்ந்த தெய்வம் என்று கருதப்படுகின்றது, விஷாரி காவில் உள்ள இளைய பகவதி வடக்கு நோக்கியது. வடக்கு நோக்கிய பகவதியும், காளியும் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்கள் எனக் கருதப்படுகின்றன. பொதுவாகக் காளி, கிழக்கு நோக்கியிருப்பாள் என்று கூறுவர். இக்கோயிலில் பெண்கள் தெற்கு வாயில் வழியாகவும் ஆண்கள் மேற்கு