பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 வாயில் வழியாகவும் போகின்றனர். இக் கோயிலில் உள்ள பகவதி உருவம் காளியின் உருவத்தை ஒத்து உள்ளது. இங்கு நடக்கும் பரணி உற்சவம் மிக முக்கியமானது. இதைக் காளியாட்டம் என்றழைக்கின்றனர். இந்தக் கோயி லுக்கு முன்னால் ஏழிவைப் பாலை மரம் (Alstonia scholaris) உள்ளது. இந்த மரம் பகவதி வழிபாட்டில் முக்கியமானது என்று கருதப்படுகின்றது. கேரளத்தில் காளி பூஜைக்கான பந்தல்கால்கள், தட்டுமுட்டுகள், மரக் கால்கள் எல்லாம் பாலை மரத்தில் செய்யப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். பாலை மரம் காளியின் ஸ்தல விருஷம் என்று கருதலாம். கடும்பாலை கூறுதலைக் காளி வழிபாட்டிற்கு ஒர் அங்கமாக இலக்கண விளக்கம் கூறி யுள்ளது. கேரளத்தில் வழங்கும் நாவேறு பாட்டுகளில் "முற்றத்தில் உள்ள தெய்வப்பாலை வெட்டி’ என்றவரி காணப்படுகின்றது. இந்த ஏழிலைப்பாலை மரத்தைத் தெய்வப்பாலையென்றும், வல்லியபாலை என்றும் கூறுவர். விஷாரிகாவில் திருவிழா நாட்களில் பாலை மரத்திலிருந்து தான் ஊர்வலம் போகும். இந்த ஊர்வலத்தில் பகவதியின் தெய்வ உருவமோ, படிமமோ எடுத்துச் செல்லப் படுவ தில்லை. யானையின் மேல் ஒரு கொடுவாளே எடுத்துச் செல்லப்படுகின்றது. கொடுவாளைச் சுற்றிச் செக்கிப் பூமாலை தொங்குகின்றது. கொடுவாளே பகவதியின் சின்னமாக வழிபடப்படுகின்றது. கொடுவாள் ஊர்வலம் வரும்போது அதற்கு முன் கோமரம் செல்வான். அவன் கையிலும் ஒரு வாள் உண்டு. ஆனால், அது கொடுவாள் போல் வளைந்திருக்காது. 'ப' என்ற எழுத்து வடிவில் வளைந்து இருக்கும். தொழப்படும் கொடுவாளை ஏற்றிச் செல்லும் யானை பெண் யானையாகவே இருக்க வேண் டும். இந்தப் பெண் யானை அந்த ஆண்டே இறந்துவிடும் என்ற நம்பிக்கை உண்டு. பகவதியின் வாளிற்கு உள்ள சக்தி அத்தகையது என்பர். இந்த நம்பிக்கையால் இந்துக் கள் எவரும் யானையைக் கொடுப்பதில்லை. இந்த ஊர் வலத்திற்கு முகம்மதியர்களே யானையைக் கொடுக்கின்