பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曾轶 றனர். இந்த கொடுவாளே எப்படிப் பகவதியைக் குறிக் கின்றது என்பதைப் பற்றி பின்னர் விளக்குவேன். மலபாரில் பகவதி கோயில்களில் பல, சில குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கத்தில் அவர்களே தொழுவதற்கு ஏற் பட்டதாகக் காணப்படுகின்றன. ஆனால், விஷாரிகாவில் எல்லா சாதியினரும் பங்கு கொள்வது சிறப்பாகக் கருதப் படுகின்றது. ஒவ்வொரு சாதியாருக்கும் ஒரு கோயில்பணி கொடுக்கப்படுகின்றது. இந்த வழக்கம் தமிழகத்துப் பெருங் கோயில்களில் இடைக் காலத்தில் காணப்பட்டது போல உள்ளது. பகவதியின் கொடுவாள் ஆண்டுதோறும் புதிய தாகக் கொல்லனால் செய்யப்படுகின்றது. பகவதியின் உற்சவத்திற்குரிய மரப் பொருள்கள் தச்சர்களால் செய்யப் படுகின்றன. நாயர், ஈழவர், முக்குவர், வேட்டுவர். வண்ணார், தட்டார் முதலிய சாதியாரும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். வேட்டுவருக்கு உப்பு கொடுக்கப்படுகின் றது. கொடுங்களுர் முதலிய முக்கிய கோயில்களில் காவு திண்டல்' என்ற சடங்கு சில ஆண்டுகளுக்கு முன்வரையில்கூட நடந்து வந்தது. இந்தக் கோயில்களில் முக்குவர், ஈழவர், வேட்டுவர், வண்ணார், தட்டார் போன்ற தாழ்ந்த இனத்த வர் போக முடியாது. ஆதலின்,அவர்களுக்கு முதலில் கோயி லுக்குச் சென்று தொழ அனுமதி கொடுத்தனர். இதைக் காவு திண்டல் என்றழைப்பர். காவு தீண்டினதும் தீட்டுப் போக நம்பூதிரியோ, கொடுங்களுரில் அடிகளோ சுத்தம் செய்யும் பூசை செய்வார். கொடுங்களுரில் தட்டான் காவு தீண்டுவதாகவும், முக்குவர் (மீனவர்) பரணி உற்சவத் தொடக்கத்திலும் அடக்கத்திலும் கோயிலில் வரலாம் என்ற வழக்கம் இடைக்காலம்வரை இருந்து வந்ததாகக் கூறுவர். திருவனந்தபுரத்தில் பத்மநாப கேத்திரத்தில் உற்சவத் தொடக்கம் மலையன் கொண்டுவந்த தீயைக் கொண்டு தொடங்கியது. திருநாவாய் rேத்திரத்தில் செருமர் கொண்டுவந்த செக்கிமாலையைத் தெய்வத்திற்கு அணிவித்தே உற்சவம் தொடங்குகின்றது. இக் கோயில்க ளெல்லாம் இன்று வேதவழிப்பட்ட நம்பூதிரி பிராமணர்