பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 களின் ஆதிக்கத்தில் இருந்தாலும், தாழ்ந்த சாதியினர் செல்லக் கூடாததாக இடைக்காலம் வரையில் இருந்தாலும், முற்காலத்தில் தாழ்ந்த சாதியினருக்கு உரியதாகவும் அவர் கள் செல்லக்கூடியதாகவும் இருந்தன என்பதையே சமீப காலம் வரை நடந்த காவு தீண்டல் சடங்கு காட்டுகின்றது, ஆனால், விஷாரிகாவு கோயிலில் காவு தீண்டல் நடந்த தாக வரலாறு இல்லை. விஷாரி காவு உற்சவத்திற்கு வரும் வேட்டுவர்க்கு உப்பு கொடுக்கப்படுகின்றது. இதன் பொருள் அங்குள்ளவர்க்குத் தெரியவில்லை. பகவதிக்குக் குருதிச்சோறு பலியாகக் கொடுக்கப்படும் சடங்கு கடைசி யாக நடைபெறும். ஆடுகளையே பலியிடுகின்றனர். இதற்கு அறுந்தாடு என்று பெயர். அறுந்த ஆடு என்பதே அறுந்தாடு ஆயிற்று. ஆடுகளை வெட்டி தவதானியங் களோடு கலந்து குருசி' யாக்கிப் பலியிடுவது வழக்கம். இப்பொழுது ஆட்டு இரத்தம் கலப்பதற்கு ஈடாக மஞ்சள் முதலியன போட்டு அரிசிச் சோற்றை இரத்தச் சிவப்பாக்கிக் குரிசிச் சோறு பலியாகக் கொடுக்கப்படுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு ஆடு வெட்டும் போதும் ஒரு வெடி விடப்படும். ஒரு முதியவர் 77 வெடிகளைத் தன்னுடைய சிறுவயதில் கேட்டதாகவும் 77 ஆடுகளை வெட்டினர் என்றும் கூறினார். இந்தக் குரிசிச் சோற்றுப் பலியைத் தருபவர் மூசாது என்ற ஒரு கிளைச் சாதியினர் ஆவர். நாயர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர்கள் மூன்று பேர் குறிப்பிட்ட காலம் விரதம் இருந்து புலால், லாகிரிப் பொருள்களைப் பயன்படுத்தாமல், .ெ ப ன் க ளு டன் உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும். இவர்களே பலி கொடுக்கத் தகுதி உள்ளவர்கள். இரவு பதினொன்று மணிக்குமேல் பவியைத் தருவர். பலியைக் கோவிலைச் சுற்றி வீசுவர். விஷாரிகாவில் உள்ள இளைய பகவதி அந்தப் பலியை ஏற்றுக் களியாட்டம் ஆடுவாள். அந்த நடு இரவில் கொடுங்களூரில் உள்ள மூத்த பகவதி, காவில் உள்ள கிணற்றின் வழியாக வந்து இளைய பகவதியுடன் சேர்ந்து ஆடுவதாக நம்பிக்கை உள்ளது. 2 கூளிகளும்