பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 器 பூதங்களும் பலியை உண்டு காவில் உலவும். ஆதலால், பதினொன்று மணிக்குமேல் கடைகண்ணிகளைப் பிரித்து எடுத்துவிட்டு எல்லாரும் காவைச்சுற்றி வெளியேறி விடு வார்கள் மூசாது மட்டுமே காவில் இருப்பார். மற்றவர்கள் இருந்தால் பூதங்கள் அடித்துக் கொன்று விடும் என்று நம்பு கின்றனர். சுருக்கமாக இவைதான் விஷாரிகாவு உற்சவச் அடங்குகளாகும். விஷாரிகாவில் மிக முக்கியமும் வியப்புக்குரியதுமாகக் காணப்படுவது செட்டியார்கள் என்னும் சாதியினர் செய் பும் சடங்காகும். மிகக் குறைவாக உள்ள இந்த இனத்தார் மாகி என்ற ஊருக்கு அருகிலும் தெல்லிச்சேரியிலும் உள்ள னர். இவர்கள் மலையாளமே பேசுகின்றனர். தமிழோ பிற மொழிகளோ அறியாதவர்கள் விஷாரிகாவு உற்சவம் இந்த செட்டியார் இனத்தாருக்கு ஒலை கொடுத்து அழைத்த பிறகுதான் தொடங்கும். முதல் ஒலை இவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. இந்தச் செட்டியார்கள் விஷகாரிகா விற்கு வந்து செட்டிப்பறம்பு என்ற இடத்துச் சத்திரத்தில் தங்கி விழாவை மந்திரங்கள் சொல்லித்தொடங்குகின்றனர். இவர்களுக்கு அனுப்பும் ஒலை வலிய வீட்டு சுப்பிரமணியன்’ என்னும் முகவரியுடன் எப்போதும் அனுப்பப்படும். இப் போது (1969) முத்தையாச் செட்டியார் என்பவருக்கு அனுப்பப் படுகின்றது. ஆனால், முகவரி வலிய வீட்டு சுப்பிரமணியன்’ என்றே காணப்படுகின்றது. யானை மேல் உற்சவத்தின்போது எடுத்துச் செல்லும் கொடுவாளை இந்தச் செட்டியார்கள் செலவில் செய்து கொண்டு வருகின் றார்கள். இந்தச் செட்டியார்கள் தலையில் சிவப்புத் துணி யால் தலைப்பாகை கட்டி , மந்திரப்பாட்டைச் சொல்லி உற்சவ ஊர்வலத்தில் செல்கின்றனர். செல்லும்போது கோழி நடே நடே' என்று கத்திச் செல்வதும் உண்டு. இந்தச் செட்டியார்களில் மூத்த குடியினராகக் கருதப்படும் முத்தையாச் செட்டியாரிடம் அவர்கள் செய்யும் வழிபாட் டைப் பற்றிக் கேட்டு வியப்புக்குரிய செய்திகளைத் தெரிந்து