பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கொண்டேன். தமிழ் சிறிதும் தெரியாத இந்தச் செட்டியார் கள் மலையாள எழுத்தில் தமிழ் மந்திரத்தை எழுதி வைத்து அதை விஷாரிகாவு உற்சவ ஊர்வலத்தில் சொல்லுகின்றனர். இந்த மந்திரப் பாட்டில் கண்ணகியின் கதை வழங்குவது கிகவும் வியப்புக்குரிய செய்தியாகும். இந்த வகையான தமிழ் மந்திரம் சொல்லப்படும் செய்தியை வேறு எந்தப் பகவதி கோயில்களிலும் எந்தக் கேரள ஆசிரியர்களும் இது வரை கண்டறிந்து எழுதவில்லை. விஷாரிகாவிலும் இது தமிழ்ப் பாட்டு என்றறியாது, ஏதோ ஒரு மொழியில் பாடப் படுவதாகக் கூறுகின்றனர். இந்தப் பாட்டு, விருத்தம் என்று அந்தச் செட்டியார்கள் கூறுகின்றனர். பாட்டு கீழே தரப் படுகின்றது: 1) 'ஆதிமுதல் காவேரிப் பூம்பட்டினத்து ஆயிரவர் வங்கிசத்தில் அரியகண் ணகை அம்மன் ஆகவே தான் பிறந்து அதிருபமான பொழுது திதிலா கோவிலருடன் பாரியாளாகவும் சிறிது காலம் சென்றபின் திங்கள் முகமாய் வந்து தனிக்காக மதுரையில் சிலம்பு கூறினாளில் நீதியரசனென்றான பாண்டியன்வாசரில் நிகரிற்ற மழுவரசனாம் நிந்தின புறக்கவே பாண்டினாடெத்தி நீ நீறாயெரித்த சோதி - ஆதிகாலத்திலும் மகிமையாய் நீ வந்த அதியமும் ஆரறிவரோ ஆனைக்குளம் வளர் பகவதி அம்மையே ஆனந்த மகமாயே’ 2) அக்ரசாலக் குளவளர் பகவதி அம்மையும் ஆனைதளியில் தேவரும்