பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ま5 மான பாடம் எதுவென்று அறியமுடியவில்லை. தமிழ் தெரிந்தோர் எளிதில் திருத்திக் கொள்ளக்கூடிய பாட்டே யாகும். முதல்பாட்டில் காவேரிப் பூம்பட்டினத்தில் ஆயிரஞ் செட்டியார் வம்சத்தில் பிறந்த கண்ணகி, கோவ லனின் மனைவியாகச் சிறிது காலம் இருந்து மதுரையில் சிலம்பு கூறின நாளில், நீதியரசன் என்ற பாண்டியன் வாசலில் நிந்திக்கப்பட்டு, நீறாய் எரித்துச் சோதியானாள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பாட்டில் கண்ணகியின் கதை நிச்சயமாகக் கூறப்படினும் முழுவதாக இல்லை. கண்ணகியைக் கண்ணகை அம்மன் என்று அழைப் பதைக் காணலாம். பாண்டியன் நெடுஞ்செழியன் நீதியரசன் எனப்படுகிறான். மழுவரசன் என்ற பெயர் கோவலன் நீதியற்ற முறையில் கொலை செய்யப்பட்டதால் வந்த பெயராயிருக்கலாம். வாசலில் என்பது வாசரில் என்று சொல்லப்பட்டது. நிந்தின புறக்கவே என்பது நிந்தித்துப் புறக்கவே என்றிருக்க வேண்டும். எத்தி நீ என்பது எய்தி நீ என்று இருக்க வேண்டும். இரண்டாம் பாட்டு பகவதி இருக்கும் இடங்களைக் கூறுவதாகும். இதில் பூரீ குறும்பக் காவு பகவதியும், கொடுங்களுர் பகவதியும் மிக முக்கிய மான தெய்வங்களாகும். வேறு சில தெய்வங்களும் கூறப் பட்டுள்ளன. ஆனைக்குளத்துப் பகவதியை இருபாட்டிலும் கடைசி வரிகள் போற்றுகின்றன. கண்ணகி, காளியாகக் கருதப்பட்டதால் மகமாயி என்று அழைக்கப்படுகிறாள். மூன்றாவது பாட்டு கண்ணகியின் வர்ணனையாகும். ஆனால், இந்த வர்ணனை காளியின் வர்ணனையாகவோ, இப்போது கேரளத்தில் காணப்படும் பகவதியின் உருவ வர்ணனையாகவோ இல்லாமல் கண்ணகியின் வர்ணனை யாக இருப்பது கூர்ந்து கவனிக்கத் தக்கதாகும். அடிமுதல் முடிவரை வர்ணனையாக உள்ளது. இப்பாட்டிலும் பிழை கள் உள்ளன. கழில்விழி கயல்விழியாக இருக்க வேண்டும். காதில் இருந்த புழையினதழகு கூறப்படுவது குறிப்பிடத் தக் கது.கண்ணகி சிலையாகக் கூறப்படுவனவற்றில் காதுவடிந்து, i தொங்கிப் பெரிய ஒட்டையிருப்பதைக் காணலாம். தங்க.