பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வர்ணிழைகும் என்பது மங்கல நாணினழகும் என்று இருக்க வேண்டும். மாந்தளிர் பொட்டு, கருமம், ஈந்தருள் என்று சொற்களைத் திருத்திப் படிக்க வேண்டும். கண்ணகியைத் தேவியாகவும், கவுரியாகவும், அபிராமியாகவும் வர்ணித் திருப்பதையும் காண்கிறோம். 'அக்ர சாலகுளவளர் பகவதி அம்மையும் என்று தொடங்கும் வரியில் கோவலன் இருந்த பொற்கோல்லனின் இருப்பிடத்துக்கு அயல் இருந்த 'அக்க சாலைப் பள்ளியின் பெயர் காணப்படுகிறது. இது சிலப்பதிகாரத்தில் வருகின்றது. கோவலன் சிலம்பு விற்கச் சென்றபோது தனிப்பெண்டுகள் தெருவைக் கடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பகவதி பாட்டிலும் ஆனைத் தனியில் தேரும் என்ற வரி சிறிது ஒத்துக் காணப் படுகிறது. கண்ணகி கதையைக் கூறும் இந்தப் பாட்டு இன்றும் மந்திரமாகச் செட்டியார்களால் பாடப்படுவது மிகவும் வியப்புக்குரிய செய்தியாகும். மற்றும் இந்தச் செட்டி யார்கள் கண்ணகிக் கதையை மாற்றிச் சொல்கிறார்கள்." சிலப்பதிகாரத்தில் கோவலனின் பூர்வ ஜென்மக் கதை போல ஒரு கதை இவர்களிடையே வழங்குகின்றது. தம்பிரா னுடைய (அரசனுடைய) சிலம்பு ஒன்றைப் பருந்து திருடிப் போயிற்று. விஷாரி ஒருவன் சிலம்பு விற்க வந்து அப்படி விற்ற சிலம்பு பகவதியின் சிலம்பாகும். தம்பிரான் நடை அடைச்சி இருந்ததால் விளக்கு வைக்கக்கூடாது. அந்தச் சமயம் வாணியன் வந்தான். விஷாரியைக் கொன்று விட் டான், அந்த வாணியன் கோவலனாகக் கடன் தீர்க்கப் பிறந்தான். அரசனுடைய தேவி கண்ணகையாகப் பிறந் தாள். அவள் கோவலன் தன்னைத் தொடக்கூடாது என்று இருந்தாள். அவளே பகவதி ஆனாள். இந்தக் கதையே செட்டியார்களிடையே வழங்கும் கண்ணகிக் கதை.பின்னால் நிகழ்ந்த சிலப்பதிகாரத்துப் பிறப்புக் கதையை முன்னால் திகழ்ந்ததாக மாற்றிக் கூறுவதைக் காணலாம். சிலம்பைப் பருந்து எடுத்துச் சென்ற கதையைப் பஞ்ச தந்திரக் கதை யுடன் ஒப்பிடலாம். விஷாரி என்ற சொல் பாம்பு விஷத்தை நீக்குவது என்ற பொருளுடையது. இங்கு விஷாரியைப்