பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 பாம்பாட்டியென்றோ பாம்பு விஷத்தை எடுப்பவன் என்றோ கருதலாம். இவனிடம் எப்படிச் சிலம்பு வந்தது என்பதை இக்கதைக் கூறவில்லை.பஞ்சதந்திரக் கதையைத் தழுவி வருவதால் பாம்புப் புற்றில் பருந்து சிலம்பைப் போட்டிருக்கலாம். விஷாரி கையில் கிடைத்திருக்கலாம். அதை விற்கப்போய் அவனை வாணியன் கொன்றான் என்று கொள்ள வேண்டும். அரசனது நடை திறக்கவில்லை என்ற நிகழ்ச்சி பாண்டியன் நெடுஞ்செழியன் தன் தேவியின் ஊடலைத் தீர்க்க சென்ற நிகழ்ச்சியை மாற்றிக் கூறினது போலுள்ளது. கோவலனின் முற்றப்புக் கதையில் அருங் கலம் விற்ற வாணிகன் கொல்லப்பட்டான் என்று கூறப் பட்டுள்ளது. ஆனால், இக் கதையில் வாணியன் சிலம்பை விற்றவனைக் கொன்றான். அதனால், கோவலனாகப் பிறந் தான் என்று கூறப்பட்டுள்ளது சிலப்பதிகாரத்தில் உள்ள பூர்வ ஜென்மக் கதையே உருமாறித் தலைகீழாக வழங்கு கின்றது. சிலப்பதிகாரத்திலேயே பஞ்ச தந்திரத்தில் வரும் பார்ப்பனியும் கீரியும் கதை சேர்க்கப்பட்டுள்ள தையும், கோவலன் மேலேற்றிக் கூறப்படுவதையும் காண் கிறோம். அதுபோன்றே, கண்ணகியின் கதையில் பஞ்ச தந்திரத்தில் வரும் மற்றொரு கதையான காக்கையும் அரசனுடைய தேவியின் நகையும் என்ற கதை சேர்க்கப் பட்டு ஒரு காலத்தில் வழங்கி இருக்கலாம். காக்கையை மாற்றிப் பருந்தாகக் கூறியுள்ளார்கள். இந்தக் கதையைக் கூறும் செட்டியார்கள் தங்கள் மூதாதையர்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்ததாக சொல்லிக் கொள் கிறார்கள். கண்ணகி ஆயிரவர்கோத்திரம் என்றும் கூறிக் கொள்கிறார்கள். இந்தச் செட்டியார்கள் விஷாரி காவில் களியாட்டத்திற்கு வாள் கொண்டு வருவதைக் கவனிக்கலாம். ஒருவேளை அந்தக் கொடுவாள் கோவலன் வேட்டுண்ட கொடுவாளையும் குறிப்பிடலாம். சிலப்பதி காரத்தில் கொற்றவையின் வாளும் கோவலன் கொல்லப் பட்டவாளும்'வெள்வாள்' என்று ஒரே பெயரால் அழைக்கம் படுகிறது. மலையாள மொழியில் கண்ணகிக் கதையைக்