பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 & கொண்ட நாட்டுப் பாடல்கள் சில வழங்குகின்றன.ஆனால் பகவதியுடன் தொடர்புபடுத்திக் கோயிலில் பாடப்படும் கண்ணகிக் கதைப்பாட்டு விஷாரிகாவில்தான் காணப்படு ன்றது. பகவதியைப்பற்றி வழங்கும் பழைய நாட்டுப் பாடல்களில் கண்ணகிகதையைக் காணோம்.பத்ரகாளியின் பாட்டிலும் கண்ணகி கதை கூறப்படுவதில்லை. ஆனால், கொடுங்களுர் பகவதிக்குப் பாடப்படும் ஸ்தோத்திராஞ்சலி யில் சில வரிகள் மறைமுகமாகக் கண்ணகியை குறிப்பிடுகின் றன. விதவாரூபையாம் தூமவதியை நான்தொழுன்னேன்’ "திங்கள்குடும் பகவான்டேபத்ணியை நான் தொழுன்னேன்’ என்று வரும் வரிகளில் கண்ணகியை விதவையென்றும், பத்தினியென்றும் மறைமுகமாகக் குறிப்பிடுவதைக் காண வாம். இதைத் தவிர கண்ணகியெனக் குறிப்பிடும் மந்திரங் களோ, கதைகளோ கொடுங்களுர்க் கோவில் வழிபாட்டில் காணப்படவில்லை. மலையன்மாரிடையே கண்ணகிப் பாட் டொன்து வழங்குகின்றது. இந்த மலையன்மாரைத் தமிழ் இனத்தார் என்று மலையாளத்தார் கருதுகின்றனர். மலை யன்மார் மலையாளமே பேசுகின்றனர். நல்லம்மை தோற் றம் என்ற பாட்டு, கண்ணகியைப் பற்றிய நாட்டுப் பாடலாகப் பாலக்காட்டுப் பகுதியில் வழங்குகின்றது. ஆனால், இப்பாட்டுகள் எவையும் இதுவரை எழுத்து மூலமாகப் பதிவு பெறவில்லை. பாலக்காட்டில் சித்துTரில் உள்ள பகவதி கோயிலுள் ஆண்கள் செல்லக்கூடாது என்ற ஐதீகம் உள்ளது. இந்தப் பகவதியைக் கண்ணகியம்மன் என்றும் கருதுகின்றனர். வடமலபாரில் உள்ள மற்றொரு முக்கியமான பகவதி கோயில் கண்ணனுளருக்கு அருகில் உள்ள ரீகுறும்பக் காவாகும். இது எடைக்காடு என்ற ஊரில் முப்பிலங்காடு (முழாப் பலாங்காடு) என்ற கிராமத்தில் உள்ளது. முழவு போன்ற பலாப்பழத்தைச் சங்கப் பாட்டுகள் கூறுவதுபோல முழவு போன்ற பலாப்பழம் பழுக்குங்காடு என்னும் பெயரில் இந்தக் கிராமம் உள்ளது. இங்குக் குறும்பக்காவு