பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 என்னும் காவில் மூன்று கோட்டங்கள் உள்ளன. இங்குள்ள கோவில்களைக் கோட்டம் என்று மலையாளத்தில் அழைக் கின்றனர். கோட்டம் என்ற சொல் சங்க காலத்தில் கோயி. லுக்கு வழங்கி வந்தது. சிலப்பதிகாரத்திலே வழங்கும் கோட்டம். பூரீகோயில், அம்பலம் என்னும் சொற்கள் கோயிலைக் குறித்து இன்றும் மலையாளத்தில் பேச்சு வழக்கில் வழங்குவதைக் காணலாம்.மூன்று கோட்டங்களில் மூத்த பகவதிக்கும் இளைய பகவதிக்கும் அருகருகே இதுக் கும் கோட்டங்கள் கிழக்கு நோக்கி இருக்கின்றன. பகவதி வில் காவல்காரனான தண்ணனுக்கு ஒரு கோட்டம் தெற்கு நோக்கி ஒரு புறமாக உள்ளது. மூத்த பகவதிக் கோட்டத்திற்கு எதிரில் ஒரு பீடம் உள்ளது, இதைக் கண்டகர்ணன் கோட்டம் என்றுசொல்கின்றனர்.பகவதியின் பலிபீடமாகவும் கொள்ளலாம். தண்ணனும் கண்டகர்ன னும் பகவதியின் மெய்க் காப்பாளர்கள். தண்ணன் கையில் பெரிய குண்டாந்தடி உள்ளது. அரிசிப் பொரியைத் தென்னை ஒலையில் வைத்து ஆக்கின அடை தண்ணனுக்கு நைவேத்தியமாக அளிக்கப்படுகின்றது. இது அழகர் மலையில் பெருமாளுக்குக் கொடுக்கப்படும் அடை போல உள்ளது. இதைத் தண்ணன் அடா என்றழைக்கின்றனர். மூத்த பகவதிக்குத் தேங்காயை உடைத்து வாழைப் பழத்தை உரித்துப் படைக்கின்றார்கள். ஆனால், இளைய பகவதி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாதலால் தேங் காயையும் வாழைப் பழத்தையும் அப்படியே படைக் கின்றனர். தண்ணன் கோயில் முகப்பிலும், வேறு சில பகவதி கோயில்கள் முகப்பிலும் பாம்பு உருவங்கள் ஒவிய மாகத் தீட்டப்பட்டிருப்பதைக் காணலாம். இந்தக் கோட்டங்கள் எல்லாம் பெரும்பாலும் மரத்தால் ஆனவை. கீழே மட்டும்தான் கட்டடம் உள்ளது. குறும்பக்காவில் பகவதி கோட்டங்களில் மூலஸ்தானத்தில் பகவதி சிலை கிடையாது. பகவதி இருக்கும் பீடத்தை பள்ளியறை என்று அழைக்கின்றனர். பகவதி இருக்க வேண்டிய பீடத்தில் ஒரு கொடுவாள் உள்ளது. கோடுவாளே