பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛砂 பகவதியென்று கருதப்படுவது முக்கியமாகக் கவனிக் கத்தக்கதாகும். மலையாள நாட்டில் பெரும்பாலான கிராமங்களில் உள்ள பகவதி கோயில்களில் பகவதி உருவச்சிலை கிடையாது. ஆனால், பகவதியைக் குறிக்கும் கொடுவாளே பகவதியென்று தொழப் படுகிறது. மாகியில் உள்ள பகவதி கோயிலில் வெண்கலத்தில் ஆன கொடுவாளே தொழிப்படுகின்றது. விஷாரிகாவில் கொடுவாளே பகவதி உற்சவத்தில் தொழப்பட்டு ஊர்வலம் வருவதை, இது சார்பாக இணைத்துப்பார்க்க வேண்டும். சிலப்பதிகாரக் காலத்திற்கு முன்னர்த் தெய்வங்களின் அடையாளங் களையே தொழும் வழக்கம் இருந்து வந்திருக்கலாம். சிலப் பதிகாரத்தில் கனாத்திறமுரைத்த காதையில் கற்பகத்திரு நிற்குங் கோட்டம், வெள்ளையானை நிற்கும் இந்திரன் கோயில், ஜீ.கைலாயம் நிற்கும் கோயில், வேல் நிற்கும் முருகன் கோட்டம், வச்சிராயுதம் இருக்கிற கோயில் ஆகியவை கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இந்திரனைக் குறிக்க வச்சிராயுதமும், முருகனைக்குறிக்க வேலும் கோட்டத்தில் தொழப்பட்டதையே சிலப்பதிகாரம் குறிப் பிடுகின்றது. சிவபெருமானின் ஊர்க்கோட்டத்திலும் பூரீகைலாயமலையின் உருவமோ படமோதொழப்பட்டது." ஆதலின் தெய்வங்களின் அடையாளங்கள் தொழப்படுவது பழைய மரபு என்றே தெளிவாகின்றது. பல்ல்வ மகேந்திரவர்மன் காலத்தில் திருச்சியில் உள்ள குகைக் கோயில் கர்ப்பகிரகத்தின் சுவரில் சிவபெருமானைக் குறிக்கும் செதுக்கப்பட்ட புடைப்புச் சித்திரமோ, ஓவியமோ வழிபடப்பட்டது என்று புதை பொருளாராய்ச்சியாளர். கே. ஆர். சீனிவாசன் அவர்கள் சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். இலிங்கம் தமிழ்நாட்டில் தொழப்பட் டது, அதற்குச் சற்றுப் பிற்காலத்தில் இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஆர். ஜி. பந்தர்க்கர் என்ற அறிஞரும் இலிங்கத்திற்கு முன்னர்ச் சிவனின் அடையா வளங்கள், அடையாள உருவங்கள் தொழப்பட்டன என்று