பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பாசிரியர் உரை மக்களும் மரபுகளும் என்னும் இந்நூல் மானிடவியல் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பில் இருவகைக் கட்டுரைகள் உள்ளன. தமிழ் நாட்டிலும், தமிழக மலைப்பிரதேசங்களிலும் வாழும் பழங்குடி-இனக்குழு மக்களது வாழ்க்கை, மொழி: கலை, பழக்கவழக்கங்களை ஆராய்கிற கட்டுரைகள் ஒரு வகை: தமிழகத்திலும்,கேரளத்திலும் வழங்கி வரும் வேலன் வழிபாடு,பகவதி வழிபாடு பற்றிய வரலாற்று மானிடவியல் கட்டுரைகள் மற்றொரு வகை. முதல்வகையைச் சார்ந்த கட்டுரைகள் இனக்குழுவாழ்க்கையின் கலை அம்சங்களை ஆராய்கின்றன. உதாரணமாக நரிக்குறவர் மருந்துகள், மொழி, மதச் சடங்குகள் பற்றிய நேரடி ஆய்வுகளினடிப்படையில் சில கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இவர்கள் நாடோடி களாகப் பல நூற்றாண்டுகள் வாழ்ந்து, சில நகரங்களின் ஒதுக்குப் புறங்களில் சில ஆண்டுகளாக நிலையாகத் தங்கத் தொடங்கியுள்ளனர். இவர்கள் வீடு வாசலற்றவர்கள். மூங்கில் அல்லது ஈந்துக் கூரைகளாலான கூடாரங்களில் குடியிருக்கின்றனர். உணவு தேடும் மக்களாக வாழ்ந்து, இப்பொழுது ஊசி, மூலிகைகள், நரிப்பல் விற்று, உணவுப் பொருள்களை வாங்கிச் சமைத்துண்பவர்களாக உள்ளனர். நாகரிகத்தின் முதற்படிகளில் கூட இவர்கள் சமுதாயம் காலடி வைக்கவில்லை. உணவுற்பத்தியில் இவர்கள் ஈடுபட iii