பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 է கூறுவதைக் கவனிக்க வேண்டும். மகேந்திரன் காலத்துக்கு முன்னர் பூரீகைலாய மலையின் உருவம் புடைப்புச் சித்திர ? ? ہر மாகவோ ஒவியமாகவோ தொழப்பட்டிருக்கலாம். இந்த மரபில் கொற்றவைக்குரிய கொடுவாள் பகவதி யாகத் தொழப்பட்டு வருவதை இன்று மலையாள நாட்டில் காண்கிறோம். இங்குள்ள பகவதிக்காவு தீயர்கள் (ஈழவர்கள்) பொறுப்பில் உள்ளது. மேற்பார்வை செய்பவர் களை ஆயத்தார் என்றழைக்கின்றனர். ஆனால், உற்சவக் காலங்களில் காட்டு மாடத்து நம்பூதிரி என்ற தந்திரி விசேஷ பூஜை செய்கின்றார். சாதாரண பூஜை ஆயத் தாராலேயே செய்யப்படுகின்றது. பூரீகுறும்ப பகவதி தோன்றிய வரலாற்றில் கொடுங்களுர் பகவதியைத் தொடர்புபடுத்திக் கூறுகின்றனர். கொடுங்களுர் பகவதி கானத்துார்காவிற்கு வந்தபோது ஒரு தீயன் (ஈழவன்) பகவதிக்குத் தேங்காயைக் காணிக்கை செலுத்தினான். இதைக்கண்ட நம்பூதிரி சினங்கொண்டு தாழ்ந்த சாதி யானான தீயனை வெட்டித் தள்ளினான். ஆனால், தம்புராட்டி பகவதி நம்பூதிரி மேல் கோபமடைந்து அவனுக் கும் அவன் குடும்பத்தாருக்கும் அம்மை நோய் காணும்படி செய்தாள். அதிலிருந்து காட்டு மாடத்து நம்பூதிரி குடும்பத் தில் எப்போதும் யாராவது ஒருவர் அம்மையால் வருந்து கின்றனராம். நம்பூதிரி பின்னர்ப் பகவதியை வேண்டியத னால் குணமாகி பூரீகுறும்ப பகவதிக்கு அவன் சந்ததியார் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டார்கள் ஆண்டு உற்சவத்தில் ஆயத்தார்களில் ஒருவன் பூசை செய்கிறான். சிவப்பு உடுப் பும் சிவப்புத் தலை ஆடையும் அணிந்து நெற்றிப்பட்டம், இடம்புரி, வலம்புரி, லோலாக்கு, சிலம்பு, கடகம் ஆகிய அணிகளை அணிந்து கோயில் குளத்தில் குளித்துக் காட்டு மாடத்து நம்பூதிரி அருகில் செல்வான். அந்த நம்பூதிரி பூசிகுறும்பகாவு பகவதியின் தோற்றப்பாட்டை பாடுவான். தோற்றம் என்பது தெய்வத்தின் தோற்ற வரலாற்றைக் கூறும் பாட்டாகும்.