பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 : “மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச் செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத் தோற்ற மல்லது நோய்க்குமருந்த தாகா வேற்றுப்பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்தி --குறுந்தொகை, 263. வேலன் வெறியாட்டைக் கூறும் இந்தக் குறுந்தொகைப் பாட வில் தோற்றம்’ என்னும் சொல் தெய்வத்தின் வரலாறுகூறு வதைக் குறித்து வழங்குவதைக் காணலாம். வட மலபாரில் தெய்வங்கள் வேடம் போட்டு ஆடும் வேலன் முதலிய பலரா லும் அந்தந்தத் தெய்வங்களின் தோற்றப்பாட்டு முதலில் பாடப்படுவதைக் காணலாம். இதை மந்திரம் என்று கருது கின்றனர். விஷாரிகாவில் செட்டியார்கள் பாடும் கண்ணகி வரலாற்று மந்திரமும் இதுபோன்ற தோற்றப்பாட்டே என்று கருதலாம். தோற்றப்பாட்டைக் கேட்ட குறும்பந் காவுப் பூசாரி கோயிலுக்குள் வந்து பகவதிக்குக் களிஆட்டம் ஆடுவான். மூத்த பகவதியின் களம் நாகப்பாம்பின் வரிப் படம்போல் தரையில் மஞ்சள் கலந்த அரிசிமாவால் வரை யப்பட்டிருக்கும். இந்தக் களத்தில் பகவதிக்கு நேர்ச்சையாக இளநீர், தங்கம், வெள்ளியில் செய்த உருக்கள், சிவப்புக் குட் டைகள் ஆகியவை வைக்கப்படும். களத்தில் ஆடும் ஆட்டக் காரன் களத்தைக் கால்விரலால் அழித்து விடுவான். இவ்வாறு, களத்தை அழிப்பதைக் களமாய்க்கல்’’ என்று கூறுவர். இந்தக்களம், பகவதி தம்புராட்டிக்குச் செய்யப் படும் சர்ப்பக்கெட்டு’ என்று கூறப்படுகின்றது. இங்கு வரும் பக்தர்களுக்கு மஞ்சள் பொடியும், செக்கிப்பூவும் பிரசாதமாக வழங்கப்படும். மஞ்சள்பொடி அம்மை நோய் வராதிருக்கப் பகவதி வரம் தருவதற்கு வழங்கப்படு கின்றது. இந்த வழக்கம் கொடுங்களுர் பகவதி கோயிலுக் கருகில் உள்ள வசூரிமாலையின் கோயிலிலும் வேறு பகவதி கோயில்களிலும் உள்ளது. கள ஆட்டம் ஆடும் ஆயத்தான் குற்றிக்கொடைன்ெறழைக்கப்படும் பனைஒலையால் ஆன சிறிய குடையும் சூரலும் (பிரம்பும்) கையில் வைத்துக்