பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登窑 கொண்டு குறியிட்டுக் குணப்படுத்தி’ என்ற மந்திரச் சொற்களைச் சொல்லி அம்மை நோய் வராதபடி குழந்தை களை ஆசிர்வதிப்பான். இந்த மந்திரச் சொற்கள் தமிழ்ச் சொற்கள் போலத் தெரிகின்றன. இதே பகவதி கோட்டத்தில் பூதகணங்களைச் சாந்தி செய்ய பெலின்’ என்றழைக்கப்படும் சடங்கு செய்யப்படு கின்றது. பலி என்பதே பெலின்’ என்று உச்சரிக்கப்படு கின்றது. இதை வேலன் இனத்தைச் சார்ந்தவனே செய் கிறான். இந்தச் சடங்கை, பூதகணங்களைக் கழிக்குதல் என்றும் அழைக்கின்றனர். இந்தச் சடங்கு மிகவும் விசித் திர மானது. பலிக்களத்தில் வாழையின் அடிமரம் நேர்க்குத் தாக வைக்கப்படுகின்றது. அந்த வாழை மரத்தில் ஐந்து மட்டத்தில் தென்னை ஈர்க்குகள் நெருக்கமாகக் குத்தப் பட்டு ஐந்து தட்டுகள் செய்யப்படுகின்றன. ஐந்து தட்டு களிலும் கிளியோலை என்றழைக்கப்படும் தென்னை ஒலை யால் செய்த ஒலை உருவங்கள் ஒரத்தில் இணைக்கப்படும். இந்த வாழை அடிமரத்திற்குக் கோழி, ஆடு பலியாக வெட்டப்படும். இதற்குக் குரிசி செய்யப்பட்டு வழங்கப் படும். குரிசி என்பது பலியான ஆடு, கோழியின் இரத்தமும் நவதானியங்களும் கலந்து துழவப்பட்டக் கலவையாகும். இந்தக் குரிசிக் களத்தில் சிறிது சிறிதாகப் பலியாகக் கொடுக்கப்படும். கலிங்கத்துப்பரணியிலும் தக்கயாகப் பரணியிலும் வரும் கூழடுதல் என்பதோடு குரிசியிடுதலை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். பல ஒற்றுமைகளைக் காண லாம். களத்தில் பலியிடப்பட்டு முடிப்பதைக் கமம் செய்வ தாகச் சொல்கின்றனர். கமம் என்ற சொல் நிறைவுறுதல் என்ற பொருளில் வழங்கும் என்று தொல்காப்பியம் கூறு கின்றது. கமம்நிறைந்தியலும் என்பது தொல்காப்பிய உரியியல் சூத்திரம். தொல்காப்பியப் பொருளில் இன்றும் மலையாளத்தில் வழங்குவது மிகுந்த வியப்பைத் தருகின்றது. வாழைப்போழால் (மட்டை) தரையில் செய்யப்பட்ட களத்தை அழிக்கக் கத்தியால் அந்த மட்டைகளைச் சிறிய