பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தாக வெட்டிக் கலைப்பதுண்டு. ஆனால், பூதகணங்களுக் காகச் செய்யப்பட்ட பெலின் களத்தை வெட்டி அழிக்காமல் திரித்து அழிக்கின்றான். திரிக்க' என்ற சொல்லைப் பயன் படுத்துகின்றனர். களவழிபாடு முடிந்ததும் அதை அழிக் காமலோ திரிக்காமலோ இருந்தால் வேறொருவன் அத்தக் களத்தைப் பயன்படுத்திக் களஞ்செய்தோனுக்கு அழிவு தேடித்தருவான் என்ற நம்பிக்கை நிலவுகின்றது. இந்த ரீ குறும்ப பகவதியின் வழிபாட்டில் கண்ணகிக் கதையைத் தொடர்புபடுத்தும் செய்திகளைக் காண முடிய வில்லை. ஆனால், குறும்ப பகவதியை மற்ற பகவதிகளை விடப் பழமையானதாகக் கருதும் நம்பிக்கை கேரளத்தில் இருக்கின்றது.கொடுங்களூர் பகவதி கோயில் இருக்குமிடத்தி விருந்து தெற்கில் கால்நாழிகை தூரத்தில் பூரீ குறும்பக்காவு rேத்திரம் என்பது உள்ளது. இங்குதான், பகவதி தேவி முதலில் தங்கியதாக ஐதீகம் உண்டு. கொடுங்களூர் பரணி உற்சவத்தைத் தொடங்குவதற்குக் குறும்பக்காவிலிருந்து தான் தாலப்பொலி எழுகின்றது. தாலப்பொலி ஊர்வலம் குறும்பக்காவிலிருந்து வரும்போது எதிரேற்பு இருக்கும். முற்காலத்தில் எதிரேற்பில் வஞ்சிக்குளத்து அரசன் தம்பி ரானும் அடிகளும் (குருக்கள்) சேர்ந்து குடை முதலிய அலங் காரங்களுடன் வரவேற்புக் கொடுப்பர். வாரநாரிகள் என்ற ழைக்கப்படும் சில பெண்கள் குலவையிட்டுப் பாட்டுபாடி வரவேற்பர். குலவையிடுதலை வாக்குரவை’ என்பர். குறும் பர் இனத்தாரிடையே பகவதி வழிபாடு முதலில் புகழ் பெற் றுப் பின்னர் அவர்களால் கேரளத்தில் பரப்பப்பட்டிருக்க வேண்டும் என்று கருதலாம். சிலப்பதிகாரக் கதையின் படி சேரன் செங்குட்டுவனுக்குக் கண்ணகி தெய்வமாகி வானுலகு சென்றதைப் பற்றி முதலில் குறவர் முதலிய மலைச்சாதியினர் சொன்னதாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். குறும்பர்கள் இந்தப் பகவதி வழிபாட்டை முதல் முதலில் கேரளத்தில் பரப்பியிருக்கலாம். பாலைக்குத் தெய்வம் பகவதி என்று இறையனாரகப் பொருள் உரை யாசிரியர் கூறியுள்ளார். அவரே பாலைக்குரிய ஊர்களின்