பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 பெயராகக் கொல்குறும்பு என்று கூறியுள்ளார். ஆதலின், பகவதி வழிபாடு இந்த உரையாசிரியர் காலமாகிய 13-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கொல்குறும்பர்களிடையே நன் றாகப் பரவியிருந்திருக்க வேண்டும். பாலைத் தெய்வமான கொற்றவையோடு ஒன்றிக்கப்பட்ட பகவதி, கொற்றவைக் குப் பதிலாகப் பாலைத் தெய்வமாக்கப்பட்டாள். வட மலபாரில் ஒவ்வோர் இனத்தாரும் சாதியாரும் தங்களுக் கென்று தனியாகப் பகவதிக் கோயில்கள் வைத்திருப்பதை யும் காணலாம். குறும்பர்கள் தங்களை ஊராளி நாயர்கள் என்று உயர்த்திக் கூறிக்கொள்கிறார்கள். இவர்களுக்கும் வாணியர்களான முச்சோலடன் நாயருக்கும் தனித்தனி பகவதிகள் உண்டு. பகவதிப் பாட்டை வண்ணான்மாரும் பாடுகின்றனர். மலையர்கள் பகவதியை நீலி என்றழைக் கின்றனர். மலைத் தெய்வமான நீலியை மானிக்காத மலையன் அன்றும் இன்றும் இல்லை என்ற மலையாளப் பழமொழி உண்டு. கேரளத்தில் புகழ்பெற்ற மாந்திரிக னான கல்லூர் நம்பூதிரிபாடு செங்குன்றத்துப் பகவதியைப் பெருந்தெய்வமாகக் கருதி ஆராதித்து வந்ததைக் கேரள ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். பகவதிக்குக் கோயில்களில் வழிபாடு நடப்பதுபோலப் பகவதிக்குத் தெய்யாட்டம் (தெய்வ ஆட்டம்) ஆடுவது மலபாரில் பரவலாக உள்ளது. இந்தப் பகவதிக்கான தெய்யாட்டத்தை வேலன்மாரும் பிற இனத்தாரும் ஆடுகின்றனர். தெய்வமாக வேஷங்கட்டி ஆடுதலைக் களியாட்டம் என்றும், கோலங்கட்டியாடுதல் என்றும் வட மலபாரில் வழங்குகின்றனர். இந்தக் கோலங்கட்டியாடல் என்ற சம்பிரதாயம் வட மலபாரில் மட்டும் காணப்படுவ தால் இந்த நாடு ‘கோலத்து நாடு’ என்றழைக்கப்படுகின் றது. இந்தக் களியாட்டங்கள், அதாவது தெய்யாட்டங் கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. மர்மமூர்த்தி தந்திர மூர்த்தி, உபயமூர்த்தி என்று மூன்று வகை மூர்த்தி களாகப் பிரிக்கின்றனர். வீரர்களின் வேஷம் போட்டு