பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஆடுதலையே கோலம் என்று சிறப்பாக அழைக்கின்றனர். தெய்வத்தையே வீரத் தெய்வமாகக் கருதும்போது தெய்யக் கோலம் என்றழைப்பர் இந்துமதக் கடவுளர்களான இராமன், இலகடிமணன், சிவன், விஷ்ணு ஆகியவர்களைக் கூட வீரர்களாக்கித் தெய்யாட்டம் ஆடுவதுண்டு. இந்தத் தெய்வக் கோலங்களில் பகவதியின் தெய்யாட்டம் பரவலாக ஆடப்படுகின்றது. தமிழில், பரத சங்கிரத்தில் கோலம்’ என்ற ஆட்டம் விளக்கப்பட்டுள்ளது. குறள், மறம், சிந்து, சோனகம், பார்ப்பான், சடாதாரிபாறை முதலிய பல கோலங்களை மேற்கொண்டு அவ்வக் கோலத்திற்குப் பொருத்தமான வசனத்துடன் மகளிரால் ஆடப்படும் கூத்துகள் கோலம் என்ற வகையைச் சேர்ந்தன என்பர். குறள் என்ற குள்ளனின் கோலம் இன்றும் செம்மறத்தி" என்னும் பெயரில், இறந்த கணவனோடு உடன்கட்டை யேறும் பெண்களுக்குக் கோலங்கட்டி, மலையாள நாட்டில் ஆடப்படுகின்றது. வரிக்கூத்து என்பதற்கு விளக்கம் கூறிய அரும்பத உரையாசிரியர் வரி என்றது நடத்தையை என்று சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். தொழிலுக்கும். குணத்திற்கும், சாதிக்கும், துணையொழுக்கத்திற்கும் தக்கவாறான நடத்தையைக் காட்டி ஆடும் கூத்தே வரி என்று விளக்கப் பெறுகிறது. மலையாளத் தெய்யாட்டங் கள் பலவும் பல்வரிக் கூத்தில் சேர்க்கக் கூடியவையே. அடியார்க்குநல்லார் பல்வரிக்கூத்தைப் பற்றிக்கூறும் பழைய ஒரு பாடலைக் காட்டியுள்ளார். இதில் பகவதியாள்: என்ற கூத்துக் கூறப்படுவதைக் காணலாம். ஆதலின், மலையாளத்தில் பகவதிக்கு ஆடப்படும் ஆட்டம் போல, ஒர் ஆட்டம் தமிழ்நாட்டிலும் இடைக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். மலையாளி என்றொரு கூத்தும், ஒற்றை முலைச்சி என்றொரு கூத்தும் பல்வரிக் கூத்தில் கூறப்படுவ தைக் காணலாம். கோலங்கட்டுகிறவன் உடம்பு முழுவதும் முக்கியமாக முகத்தில் அழுத்தமான பல வர்ணங்களால் வேஷம் பூசிக் கொள்கிறான். இவ்வாறு கோலம் எழுதப்படு வதையே எழுது வரிக்கோலம்' என்று சிலப்பதிகாரம் கூறு