பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மனையில், ஒரு கன்னிகா பிலாவில் கயறி கண்டல் சக்கா பறிச்சு (பலாமரத்தில் ஏறி கண்டல் பலா என்ற பழத்தை பறித்தான்) என்ற குற்றங்கொண்டு, மாதுலனால் (மாம னால்) வாதிக்கப்பட்டு (கொல்லப்பட்டு) அக்கன்னிகா பின்னிடுமனையில் (போதி மனையில்) பகவதி என்ற கன்னி கோலமாய் ஆராதிக்கப்பட்டாள்' என்று ஒரு மலையாளத் தோற்றப்பாட்டு கூறுகின்றது. அம்மோன்மார், திருமுன்பு மார் என்பவர்கள் பிராமணனுக்கும் கடித்திரிய பெண் லுக்கும் பிறந்த கலப்பு இனத்தாராவார். தாழக்காட்டுப் பகவதியின் தோற்றப்பாட்டிலிருந்து கண்ணகி கதையுடன் சம்பந்தமில்லா வேறு பகவதிக்கும் உண்டு என்பது தெரி கின்றது. வடமலபாரில் வாணியர்க்குச் சொந்தமான மச்சில்லு பகவதி அல்லது முச்சிலோட்டு பகவதிக்கும் வேறு விதமான கதை உள்ளது. இந்தப் பகவதிக்கு 12 ஆண்டு களுக்கு ஒருமுறை பெருங்களியாட்டம் நிறைய செலவு செய்து நடைபெறுகின்றது. பகவதியுடைய கலியானமும் நடத்துகிறார்கள். இவர்கள் பாடும் பாட்டில் பகவதியின் வர்ணனை காளிதேவியின் வர்ணனையாகவே உள்ளது. கேரளத்தில் பெரும்பாலான பகவதிப் பாட்டுகளில்காளியின் வர்ணனையும் வணக்கமுமே இருக்கின்றன. கண்ணகியின் கதையை இந்தப் பாட்டுகளில் காண முடியவில்லை. ஆனா லும், கண்ணகிக் கதையைக் குறிப்பிடும் சில செய்திகள் இல்லாமலுமில்லை. ஒரு வேலனாட்டக்காரன் சொன்ன கதையிலிருந்து, கண்ணகி கதை இருந்தது என்பது தெரி கின்றது. 'பொன் பணிக்காரரை அந்து நல்ல அபிப்பிரா

யம் இருந்ததில்லா. தன்னைப் பட்டிச்ச (ஏமாற்றிய) நகர வீரிய பெருந்தட்டானோடு வாக்கத்துரம்மா பறையுன்ன சங்கதியிலிருந்து வியக்தமாகும்' என்று மலையாளத்தில் சொன்னான். கோவலனை ஏமாற்றிய தட்டானை நகர வீரிய தட்டான் என்றும், கண்ணகியை வாக்கத்துரம்மா என்று சொல்வதும் தெரிகின்றது. கண்ணகி என்ற வாக்கத் து மா சொல்லும் பாட்டு மலையாளத்தில் பின் வருமாறு கொடுக்கப்படுகின்றது.