பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லை. நகர்ப் புறங்களில் இன்றும் நாடோடிகளாக வாழ்கிறார்கள். வாக்ரிபோலி என்ற ஒர் இந்தோ ஆரிய மொழி பேசுகிறார்கள். ஒர் இனக்குழுச் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழும் இவர்கள் தமிழகச் கலாச்சார ஒடையினின்றும் ஒதுங்கியே வாழ்கிறார்கள். இவர்களது வாழ்க்கை மொழி, சமயம் ஆகியவற்றை ஆராய்வது மிகவும் கடினமான முயற்சி. சீனுவாச வர்மா, ராஜகோபாலன், சிரோமணி முதலிய ஆய்வாளர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கள ஆய்வுகள் மூலம் இதுவரை தெரியாத பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் பற்றிய கற்பனைக் கதைகளே, இதுவரை அவர்களது யதார்த்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றும்படி வெளியிடப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளில் நேரடி ஆய்வுகளை, மானிடவியல் அறிவினால் ஆராய்ந்து, நரிக்குறவர் வாழ்க்கையில் சில அம்சங்களின் உண்மையான செய்திகள் விஞ்ஞான முடிவுகளாக வெளியிடப்படுகின்றன. இது இந்நூலின் சிறப்பு அம்சமாகும்.

    மலைநாட்டு மக்களில் பெரும்பகுதியினர் நீலகிரிமலைப் பிரதேசங்களில் வசிக்கிறார்கள். அவர்களில் கோத்தர், கசவர், இருளர் ஆகிய இனத்தவர் தமிழையொத்த மொழிகளைப் பேசுகிறார்கள். இம்மொழிகள் தமிழுக்கும் கன்னட, மலையாள  மொழிகளுக்கும் இணைப்பு மொழியாக உள்ளன. திராவிட மொழிகளின்ன் மொழியமைப்பையும் வரலாற்றையும் அறிய இவை துணைபுரிகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் ஆய்வாளர்கள், இம்மொழிகளை ஆராய்வதற்காக நீலகிரிமலைப் பிரதேசங்களுக்குச் செல்லுகிறார்கள்.மொழியோடு வாழ்க்கையையும் மரபுகளையும் ஆராய்கிறார்கள். எனவே அவர்களது ஆய்வு இனவியல், மானிடவியல் துறைகளிலும் நுழைகிறது. இருளரைப் பற்றிச் சில கட்டுரைகளும், கோத்தர் பற்றிய ஒரு கட்டுரையும், கசவர் பற்றிய ஒரு கட்டுரையும் இத் தொகுப்பில் உள்ளன.