பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔鳍 தேவதையின் வழிபாடு இதில் கலந்திருப்பதாகக் கருதி வேண்டியுள்ளது. சைனர்களின் தெய்வங்களின் வரிசையில் நாக வரிசையில் நாக தேவதையான (Snake goddess) பத்மாவதி, முக்கியமான தெய்வமாகும். இதை ஒரு புகழி (இயக்கி) என்று சொல்வர். தாமரைப் பீடத்தில் இருப்பு தால் பத்மாவதி என்று அழைக்கப்பட்டாள். ஏழு படமுள்ள நாகங்கள் தலையில் குடைபிடிப்பதுபோல் பத்மாவதியின் சிலை அமைக்கப்படும். புத்தர்களாலும் சைனர்களாலும் வனங்கப்படும் எட்டு நாக தேவதைகளின் தலையிலும் எட்டு வகை தவநிதிகளான ரத்தினங்கள் உண்டு என்ற நம்பிக்கை உண்டு. வேட்டுவவரியில் கண்ணகியை ஒரு மாமனியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி’ என்று வர்ணித் திருப்பதைக் காணலாம். மு. இராகவையங்கார் (ஆராய்ச்சித் தொகுதி-மு. இராகவையங்கார்) தாமரைப் பொருட்டில் வீற்றிருப்பவள் என்ற பொருளில் மாமணி என்று: அழைக்கப்பட்டாளென்றும் கூறியுள்ளதைக் காணலாம். கண்ணகி, கர்னகை என்ற பெயர்க் காரணம் இதுவேயாகலாம். மற்றும் திருமணி என்ற பெயர் சங்க காலத்திலேயே நாகத்தின் தலையில் இருந்த இரத்தினத் திற்குப் பெயராக வழங்கியுள்ளது. கண்ணகியைத் தாமரைப் பொருட்டில் வீற்றிருப்பவள் என்றும், நாக இரத் இனம் போன்றவள் என்றும் ஒப்பிடுவதிலிருந்து சைனரின் பத்மாவதி தெய்வத்தோடு மிகவும் நெருங்கிய ஒப்புமை பெறுகிறாள். சைனர்களால் இந்த பத்மாவதி தேவதை இந்துக்களின் லக்ஷமி அல்லது திரு போன்று செல்வச் செழிப் பைக் குறிக்கும் கடவுளாகவும் கருதப்பட்டதுண்டு. சைனர் களின் நாக தேவதையாகக் கருதப்பட்டபோது இந்த தேவ தையை விஷஹரி (Vishallari) என்றழைத்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த விஷஹரி என்ற பெயரே விஷாரி என்று விஷாரிகாவுப் பெயரில் மாறியது என்பது தெளிவாகும், விஷாரிகாவில் உள்ள பகவதி முன்னர்