பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎岛 யைத் தாய்த்தெய்வமாகக் கருதும் குறிப்பு உள்ளது. ‘இவளோ கொங்கச் செல்வி, குடமலையாட்டி’ என்ற வேட்டுவவரிப் பாடல் வரிக்கு உரையெழுதிய இடத்தில் இவள் துர்க்கையாகவே பிறந்தாள் என்று எழுதியிருப்பதைக் காணலாம். * கானகர் செல்வி' (அகம்: 3:5) நன்னனுடைய கொண்காணத்தில் அமர்ந்த செல்வியாக அதாவது துர்க்கையாகச் சங்க இலக்கியத்தி லேயே கூறப்படுகிறாள். இப்போது அவள் கான துர்க்கை யாகக் கானங்காட்டில் தொழப்படுகிறான். அதுபோலவே, கண்ணகியைத் துர்க்கையாகக் கருதினபோது கொங்கு நாட்டுத் துர்க்கையாகவும், குடமலை நாட்டுத் துர்க்கை யாகவும் கருதப்பட்டாள். பதிற்றுப்பத்து விந்தாடவி பென்கிற வித்தியமலைத் துர்க்கையைக் குறித்துப் பாடியிருப் பதையும் காணலாம். துர்க்கை, காட்டிலும் மலையிலும் வாழ்ப3:ளாக, இருப்பவளாகக் கருதுவது வழக்கம். கொடுங்களூர் பக: தாத்திர மாலையில் காளி யென்று முதலில் சிக்கப்பட்டுப் பின்னர் பூரீ குறும்ப பகவதி, கொடுங்களு பகவதி, பத்ரகாளி என்ற பெயர்கள் வருகின்றன. ரீ குறும்ப 1:தி என்ற பெயர் கொடுங்களுர் பகவதிப் பெயருக்கு முன்னால் வருவதைக் கவனிக்க ர மாலையில் தாய்த்தெய்வ معر வேண்டும். இந்த ள் f : மாகிய கார்த்தியாயினியி யரும் பற்றும் சப்த மாதர் களான மகேஷ்வரி, அம்பிகா முதலிய பெயர்களும் காணப் படுகின்றன. இதிலிருந்து பகவதி வழிபாட்டில் தாய்த் தெய்வ வழிபாடு கலந்துள்ளது தெரிகின்றது. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதும் திவாகர நிகண்டில் பகவதியின் பெயர்களாகத் துர்க்கை, கொற்றவை, ஐயை, நீலி, விந்தைசையமகள், பாலைக்கிழத்தி, கன்னி, குமரி நாராயணி என்ற பெயர்கள். கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பெயர்களெல்லாம் தாய்த் தெய்வத்தைக் குறிப்பன கொற்றவை காளியானபோது பகவதியும் கொற்றவை யாகக் கருதப்பட்டாள். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையனார் அகப்பொருளுரையில் பால்ைக்குத் f