பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蚤 தெய்வமாகக் கொற்றவைக்குரிய இடத்தில் பகவதி கூறப் பட்டதைக் காணலாம். நிகண்டுகளில் பாலைக்கிழத்தி என்று பகவதி கூறப்பட்டுள்ளாள். விந்தைசைய மகள் வித்திய மலையில் வாழ்பவள் என்ற பதிற்றுப்பத்துச் செய்தியை ஒட்டி வருகின்றது. இச்செய்தி வடநூலான ஹரிவம்சத்திலும் காணப்படுகின்றது. கன்னியாகவும் குமரி யாகவும் தாய்த்தெய்வத்தைக் கருதுவது மிகப் பழமையான கருத்தாகும். பெரிப்ளுஸ் என்ற கிரேக்கன் கி.பி. முதல் நூற்றாண்டில் கன்னியாகுமரித் துறையில் குமரித்தெய்வம் இருந்ததையும் அவளைத் தொழுவதற்குத் துறையில் குளிப் பதைப் பற்றியும் எழுதியுள்ளான். தைத்திரிய ஆரண்யகம் என் வடநூலில் (கி.மு. 7-ஆம் நூற்றாண்டு) கன்னியா குடிக் என்ற பெயரில் தாய்த்தெய்வம் குறிப்பிடப்பட்டுள் গ্ন্য" ী . வேதவழக்கொடுபடாத தாய்த்தெய்வத்தை ளும் வணங்கினர். கன்னியாகுமரித் தெய்வம் ாகவும் பின்னர்ப் பகவதியாகவும் கருதப்பட்டாள். நாள் பூரநாள் என்று திவாகரம் சொல்லுகின்றது. ைநாட்டில் பூரநாளன்றே பகவதிக் கோயில்களில் அம் தொடங்குகின்றது. திவாகர நிகண்டு எழுதப் பட்ட காலத்திற்கு முன்னர் எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டு களில் பகவதி வழிபாடு தமிழகத்தில் தொடங்கியிருக்கலாம். தாய்த் தெய்வமாக வழிபடப்பட்டபோது பகவதி என்ற பேயர் கட்டப்பட்டிருக்கலாம். பகவதி என்ற பெயர் தாரா என்ற பெளத்தர்களின் தாய்த்தெய்வத்திற்கு, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வழங்கியதைக் காண்கிறோம். 2 இந்தத் தாரா தேவியின் வணக்கம் வங்காளத்தில் ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் தொடங்கினதாக அறிஞர்கள் கருது கின்றனர். இந்தத் தெய்வத்தை வங்காளத்தில் பால அரசர்கள் போற்றி வழிபட்டபோது, பகவதித் தாரா' என்ற பெயருடன் அழைத்தனர், டி.சி. சர்க்கார் (D.C. Sirca) என்ற வரலாற்றறிஞர் வங்காளத்தில் சந்திரதீவத் தில் இருந்த பகவதித்தாரா எள்ற தேவதையின் வழிபாடு பற்றி விளக்கியுள்ளாள். பால அரசர்களின் (Pala kings)