பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛 剪 கொடியில் பகவதி தாராவின் உருவம் டொறிக்கப்பட்டிருந் தது. ஏழாம் நூற்றாண்டில் தாரா வழி பாடு பரவியிருந்த தைப் பற்றி ஹால் வான் சுவாங் என்ற யாத்திரிகன் குறிப் பிட்டுள்ளான். தாராதேவியின் வணக்கம் .ெ ப ள த் த ர் களின் தாய்த்தெய்வ வணக்கம் மட்டுமன்று தாராதேவியை நாக தேவதையாகவும் கருதுகின்றார்கள். தாராதேவியைச் சைனரின் பத்மாவதி தேவியோடு நாக தேவதையாகக் கூறு கின்றார்கள். கொடுங்களுர் பகவதியின் ஸ்தோத்திர மாலை யில் தாரா.ே வியின் பெயரும் காணப்படுகின்றது. ஆதலின் பகவதியின் வழிபாட்டில் பெளத்தர்களின் தாய்த்தெய்வ மான, நாகதேவதையான தாராதேவியின் வணக்கமும் சேர்ந்திருக்கின்றது என்பதை அறியலாம்.** மணிமேகலையி லேயே தாரை, வீரை என்ற பெயர்கள் காணப்படுகின்றன. பெளத்தர்களின் தாரை தெய்வத்தின் பெயரால் பெண்கள் பெயர் மணிமேகலை காலத்திலேயே வழங்கி வந்துள்ளது. ஆதலின், கண்ணகியின் பகவதி வழிபாட்டோடு தாராவின் வணக்கமும் பிற்காலத்தில் சேர்ந்திருக்கலாம். தாய்த் தெய்வங்களான :ெத்தர்களின் தாரையும் பத்மாவதியும் கண்ணகி தெய்வத்துடன் சக்தி தெய்வங்களாகக் கருதப் பட்டு, நாக தேவதையாகக் கருதப்பட்டு இணைக்கப்பட்ட போது கண்ணகிக்குப் பகவதி என்ற பெயர் வழங்கியிருக்க வேண்டும். கண்ணகி பகல் கியாகத் தொழப்பட்டது. எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கலாம். வையாபுரிப் பிள்ளை யவர்கள் சிலப்பதிகாரத்தை எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியதாகக் கருதினார். சிலப்பதிகாரக் கண்ணகியின் வழிபாடு இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதென்றால், 8, 9 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பகவதி வழிபாட்டிற்கும் கண்ணகி வழிபாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளிக் காவத்தில் இந்த வழிபாடு என்ன ஆயிற்று என்பதற்கு விடை தர வேண்டும் தாந்திர வழிபாடு (Tantricist) தோன்றிய பின்னர்தான், பகவதி வழிபாடு தோன்றியிருக்க வேண்டும் என்று உறுதியாகக்