பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புடையது. மரத்தடியில் நிற்கும் பெண் தெய்வங்களின் (Tree goddess) சிற்பங்களைக் கி.மு. இரண்டாம் நூற்றாண் டிலேயே காணலாம். பார்ஹாத், சாஞ்சி ஸ்து பங்களிலும் குப்தர்களின் கலையிலும் மரத்தடியில் நிற்கும் இந்தப் பெண் தெய்வங்களின் சிற்பங்கள் சிறப்பாகக் காணப்படுகின்றன. மலர் நிறைந்த மரக்கிளையினடியே இந்தப் பெண் தெய்வம் நிற்கின்றதைக் காண்கிறோம். இந்தப் பெண் தெய்வத்தை யக தேவதை என்று கூறுவர். இதையே କ୍ଷୁ; :sit" (Wrksaka) என்று அழைப்பர். இந்த யகதி தேவதைகள் பழங்கற்காலத்தில் தோன்றிய தாய்த்தெய்வத்தின் சிற் பத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தவை என்று ஹென்றிச் சிம்மர் என்ற சிறந்த சிற்பக்கலை அறிஞர் கூறி யுள்ளார். இந்த யகசி தேவதைகள் புத்த மதத்திலும் சைா: மதத்திலும் தேவதைகளாக வணங்கப்பட்டன. சி. ம் பாற்றின் கரையில் முகைகள் அவிழ்ந்த மலர்களு.ை of கோங்க மரத்தின்கீழ் ஓர் இயக்கித் தெய்வம் தோன்றி: தாகக் காடுகாண் காதையில் சிலப்பதிகாரம் கூறியுள்ளது. இந்த இயக்கித் தெய்வம் சைவ மதத்தைச் சார்ந்ததாக லாம். புறஞ்சிறை மூதூர் பூங்கணியக்கிக்குப் பால்:ாயாசம் படைத்து வணங்கிய மாதரியை அடைக்கலக் க. - இளங்கோ கூறியுள்ளார். சைனர்களின் இயக்கித் தெய்வ வழிபாடு சிலப்பதிகாரக் காலத்திலேயே இருந்தது, நற் றினை 2.19ஆம் பாடலில் ஒரு முலை குறைந்த திருமா வுண்ணி எரி போன்ற பூவுடைய வேங்கை மரத்தில் கட்டுப் பரணுக்கருகில் நின்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் திரு மாவுண்ணி கண்ணகியாக இருக்கலாம் என்று சில ஆராய்ச்சி யாளர் கூறினர். கேரளத்தில் மச்சிலம்மா, மச்சிலோட்டு பகவதி எனப்படும் தெய்வங்கள் பரணுக்கடியில் இருத்த பகவதியைக் குறிப்பிடப்படுவதை இது சார்பாகக் கவனிக் கத்தக்கது. திருமாவுண்ணி என்ற பெயரில் உண்ணி என்ற சொல் மலையாளத்தில் வழங்குவதையும் குறிப்பீட்டுள்ள னர். மலையாளத்தில் உண்ணி நீவி சந்தேசம், உண்ணி யாச்சி சந்தேசம் என்னும் நூல்கள் உள்ளன. திருமாவுண்ணி Tتي .