பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔盘 கூறப்படுகின்றது. தரும தேவதையின் பெயர் மரகதவல்லி, பூகநிழலினள், இயக்கி, பகவதி, அருகனைத் தரித்தாள், அறத்தின் செல்வி, அம்பாலிகை என்று நிகண்டு கூறுகின் றது. இப் பெயர்களில் மரகதவல்லியும், பூகநிழலினள் என்ற இரு பெயர்களும் யகசித் தெய்வத்தைப் பாக்குமரக்குலை யினடியில் காட்டும் வழக்கம் உண்டு. இவளே பூகநிழலினள் ஆவள். இந்தப் பூக நிழலினளான யகதியை, நிகண்டு இயக்கி யென்றும் பகவதியென்றும் கூறுவதைக் கவனிக்க வேண்டும். ஆதலின் பகவதியான கண்ணகி ஒரு வகையில் யகசித் தெய்வமாகும். சூடாமணி நிகண்டு பூக நிழலுற்ற வஞ்சி என்று குறிப்பிடுகின்றது. மலைவாணரே கண்ணகி தெய்வமானதைப் பார்த்துச் செங்குட்டுவனுக்குக் கூறியதாகச் சிலப்பதிகாரத்தில் வரு கின்றது. பகவதி வழிபாடும் தமிழர் என்று கருதப்படும் மலையரால், மலைவாணரால் முதலில் மலை நிலத்தில் பரப்பப்பட்டு பின்னர், முல்லை நிலத்துக் குறும்பர்களால் பிற இனத்தாரிடம் பரப்பப்பட்டிருக்கலாம். அதனால்தான், எல்லா பகவதிகளுக்கும் முந்தின பகவதி, முதல் பகவதி குறும்ப பகவதி என்ற கருத்து கேரளத்தில் நிலவுகின்றது. இனக் குழு மக்களால் (Tribal groups) தொழப்பட்ட கண்ணகியாகிய பகவதியின் வழிபாடு, பின்னர் மற்ற சாதி யினராலும், கடைசியில் வைதிக மதத்தைச் சேர்ந்த நம் பூதிரிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் காணலாம். இனக்குழு மக்களின் பகவதி தெய்வத்தை வழிபட்ட நம் பூதிரிகளும், உயர்ந்த சாதியினரும் கொடுங்களுரில் அந்த இனக்குழு மக்களையே சாதியின் பேரால் அவர்களுடைய பகவதி தெய்வத்தை வழிபட, எல்லா நாட்களிலும் அனுமதிக்காததை இடைக்காலம் வரையில் காண்கிறோம், இப்பொழுது உள்ள பகவதி தெய்வ வழிபாட்டில் ஆரியர்க்கு முற்பட்ட பழங்கற்காலத்துத் தாய்த்தெய்வ வணக்கமும், பழந்தமிழரின் கொற்றவை வணக்கமும், இந்து மதத்தின் சக்தி, காளி வணக்கமும், சைனரின் பத்மாவதி