பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. 1 {}. 1 1. l 2. 13. § { விஷாரிகாவில் மந்திரம் சொல்லும் செட்டியார் களைப் போன்ற ஏழுர் செட்டியார்கள் கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ளனர். அவர்கள் குல தெய்வமாக ஒடுப்பறை நாகரம்மனைத் தொழுகின் றனர். இவர்கள் சாதியில் யாரையும் பாம்பு கடித்துச் சாகடிக்காது என்ற நம்பிக்கை உண்டு. இந்த நாகரம்மன் பத்மாவதியாக இருக்கலாம். Information on Tara from the article "Tara" by A.K. Bhattacharya in the publication “The Sakti Cult and Tara” Edited by Prof D. C. Sircar University of Calcutta-1968. கொற்றவையை வெற்றியைத் தரும் தெய்வம் என்று தமிழர் கருதினர். ஆனால், துர்க்கை நெருப்பு, நீர், பாம்பு, ஆறலைக் கள்வர் முதலிய அபாயங்களிலிருந்து தடுப்பவள் என்று வட நூலார் கருதினர். ஆறலைக் கள்வர் தங்களுக்குக் கொள்ளை தரும்படி கொற்றவையைத் தொழு தனர். ஆனால், ஆறலைக் கள்வரின் கொள்ளை யிலிருந்து காப்பாற்றும்படி துர்க்கையை வழிபட்ட தாக வடநூல்கள் கூறும். ஆதலின் கொற்றவை யும், துர்க்கையும் தொடக்கத்தில் வெவ்வேறு தெய்வங்களாகும். informatign frain the article "“The Tara of Chandrad-wipa by Prof. D.C. Sircar in the publication ‘ ‘The Sakti Cult and Tara’’ Edited by prof. D C. Sircar—University of Calcutta I 368 தாரை என்ற தெய்வம் கடலில் விழுந்தோரைக் காப்பாற்றும் தெய்வமாகப் பெளத்தர்களால் முதலில் வணங்கப்பட்டது. மணிமேகவா தெய்வ மும், இதேபோன்ற கடல் தெய்வம் என்பது சிலப் பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலின் தாரையும் மணிமேகலையும் ஒரே வகையான தெய்வங்கள். மாதவியின் முற்பிறப்புப் பெயர் தாரையென்று மணிமேகலை கூறுகின்றது,