பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கோத்தர்களின் சாவு விழா கோ. சுப்பையா, எம்.ஏ. |கோத்தகிரி நகரிலும், அதன் சுற்றுப்புற மல்ைச்சாரல்களிலும் வசிப்பவர்கள் கோத்தர்கள் என்னும் இனக்குழு மக்கள். அவர்களது மொழிக்கு வரிவடிவமில்லை. அவர்கள்_பேசும் மொழி திராவிட இன மொழி. தமிழோடு நெருங்கிய ஒப்புமையுடையது. அவர்களது மொழியைக் கற்று அம் மொழிக்கு வருணனை இலக்கணம் எழுது வதற்குரிய ஆராய்ச்சியில் அண்ணாமலைப் பில் கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் ஆராய்ச்சி மாணவர்ாக இருக்கும் கோ. கப்பையா ஈடுபட் டிருக்கிறார். இவ்வாராய்ச்சிக்குரிய சான்றுகளைத் தேடும்பொழுது அவர்களது வாழ்க்கை முறையை யும் துணுகி நோக்கி இருக்கிறார். அவரது ஆய்வின் விளைவாக இக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. -பதிப்பாசிரியர்.1 தமிழகத்தில் நீலகிரி மலையில் உள்ள பகுதியிலும், கொடைக்கானல் மலைப்பகுதியிலும் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இப் பழங்குடி மக்களுள் நீலகிரியில் வாழும் கோத்தர்கள் மிகவும் முக்கியமானவர்கள். ஒவ்வொரு பழங் குடி மக்கட்கும் தனிப் பண்பாடு உண்டு. திராவிட இனத்தைச் சார்ந்த இப் பழங்குடி மக்கள் கோத்தம் (Kota)? எனும் தென் திராவிட் மொழியைப் பேசுகின்றனர். இவர் களுடைய பழக்க வழக்கங்கள் நீலகிரியில் வாழும் ஏன்னய பழங்குடி மக்களது பழக்க வழக்கங்களினின்று வேறுபட்டன வாகும். இவர்களுடைய சாவுச் சிறப்பு (Funeral festival) மிகவும் குறிப்பிடத்தக்கது. இதனை இவண் விரிவாகக் காண்போம். இவர்களுடைய சாவுச் சிறப்பு இரண்டு வகைப்படும். இறந்த அன்றே இறந்தவருக்குச் செய்யும் ஈமச் சடங்கு ஒரு வகை; மற்றொன்று இறந்தவரின் ஆவி நல்லுலகம் அன்ட்