பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

锣款 இறந்தவரைக் குளிப்பாட்டி, உடலில் துணி போர்த்து கிறார்கள். அக்கட்டிலில் இறந்தவரைப் படுக்க வைக்கின்ற னர். உறவினர்கள் அவருடைய நெற்றியில் மூன்று வெள்ளிப் பணத்தை வைக்கின்றனர், உறவினர்கள் வந்த வுடன், சில சடங்குகளைச் செய்கின்றனர். ஒரு பையில் அரிசி, பருப்பு முதலியவற்றைப் போட்டு, அதை ஒரு சிறு பொதி போல் செய்கிறார்கள். உறவினர்கள் அப். பொதி யைத் தோளில் சுமந்து கொண்டு, இறந்தவரை மும்முறை வலம் வருவார்கள். இவர்களோடு மற்றவர்களும் சேர்ந்து, கொல், பர் முதலிய இசைக் கருவிகளை முழக்கிக் கொண்டு வலம் வருவார்கள் கடைசியில் ஒவ்வொருவரும் தன் நெற்றி. இறந்தவரின் கால் பெருவிரலைத் தொடும்படி தலை தாழ்த்தி வணங்குவார்கள். இச்செயலுக்கு, 'தான்மூட்ம்' என்று சொல்கின்றனர். அன்று முழுவதும் இறப்பை உணர்த்தும் சர்வு இசையை முழக்கிக் கொண்டேயிருப்பார்கள். சுமார் மாலை மூன்று மணிக்கு இறந்தவரைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வார்கள், சுடுகாட்டிற்குத் துரலி' என்று பெயர், இறந்தவரை எரித்து விடுவார்கள். சுடுகாட்டில் ஊர்மக்கள் கொடுத்த விறகுக் கட்டைகளையும், சுள்ளி விறகுகளையும் கொண்டு சிறுமேடை அமைப்பார்கள். தூலியின் ஒரத்தில் சிறு சுள்ளிகளின் உதவியால் நெருப்பு மூட்டுவார்கள். இறந்தவரை எரிப்பதற்கு முன், சில சடங்குகள் நடை பெறும். இறந்தவர் பெண் என்றால், ஆண் தன் உடை களைக் கழற்றி வேறு உடை அணிவான். இறந்தவர் ஆண் என்றால், மனைவி, தன் ஆடை தகைகள் முதலியவற்றிைக் களைந்து விடுவாள். வேறு உடை அணிவாள். தலைப் பின்னலையும் களைந்து விடுவாள், கடைசியில் குடிகட் டோடு, இறந்தவரை விறகு மேடை மீது வைத்து எரிப் பார்கள். பின்னர், அனைவரும் ஊருக்குத் திரும்பி விடு வார்கள். அன்று ஊர்மக்கள் கொடுத்த அரிசி, பரும் A 6' 33-3