பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

磐掌 பெண் புத்தாடை அணிந்து, தலைவாரிப் பின்னிக்கொள் வாள். அவள் விரும்பினால், மறுமணம் செய்து கொள்ள லாம். இந்த 'பாப்ம்" எனும் பண்டிகை எட்டு நாட்களுக்கு நடைபெறும். இக் காலத்தில் புத்தாடை அணிந்து, மக்கள் மகிழ்வோடு இருப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஆடலும் பாடலும் தெய்வ வழிபாடோடு இடம் பெறும். புதுமணம் புரிவோர்களும், மறுமணம் செய்வோர்களும் த்ங்கள் காரி யங்களை இச் சமயத்தில் நிறைவேற்றிக் கொள்வார்கள், ஊருக்கும், மக்கட்கும் நன்மை ஏற்பட இறைவனுக்கு வேண்டுதல் இடுவார்கள். உருவம் இல்லாத இறைவனை வழிபடுகின்றனர். விதவை மறுமணம், மணமுறிவு (விவாகரத்து), காதல் மணம் முதலியன இவர்களிடையே உண்டு, மனிதன் இறந்தபின் ஆவியாக உயிர் வாழ்கிறான் என்றும், வானுலக வாழ்வு உண்டு என்றும் கோத்தர்கள் நம்புகின் றனர். இம் மக்கள் மிகுந்த தெய்வ பக்தியுடையவர்கள். மேற்கோள்களும் ஆதாரங்களும் 1. நீலகிரியில் கோத்தர்கள், தொதுவர்கள், பளியர் கள். இருளர்கள், குரும்பர்கள், கசவர்கள் எனப் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். கொடைக்கானலில் பழியர்கள் 'பழையர்) புலையர்கள் என்ற பழங்குடி மக்கள் வாழ் கின்றனர். 8. திராவிட மொழிக் குடும்பம் முப்பெரும் பிரிவுகளை உடையது. அதில் தென்திராவிட மொழிக் குடும்பம் ஒன்று. இது தமிழ், கன்னடம், மலையாளம், கோத்தம், தொதுவம், படகு, கோதவம் (கூர்க்கு) என்ற மொழி களை தன்னகத்தே கொண்டுள்ளது. கோதவம் மொழி யைக் குடகு என்றும் கூறலாம்,