பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

奪き 3. குடிகட் என்று கூறப்படுவது இன்று நம்மிடையே இறந்தவருக்காக நாம் செய்கின்ற பாடையைப் போன்ற தாகும். 4. வர்தால்தல்ம் என்னுமிடம் ஊரிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள மைதானம். அங்குதான், இறந்தவர் களின் ஆவிகள் நல்லுலகம் அடைய ஒரு சிறு சாவுச்சிறப்பு நடைபெறும். 5. பச்தால் என்பது இறந்தவரை வைத்துக்கொண்டு, இறந்த அன்று செய்கின்ற ஈமச் சடங்காகும். இதனைப் பசுமையான சாவுச்சடங்கு எனப் பொருள் கொள்ளலாம். 8, பாப்ம் என்பது கோத்தர்களின் குலதெய்வம் கம்பட்டராயருக்குக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இது தம் பொங்கல் பண்டிகை போன்று சிறப்புடையது. ."! வர்தான் என்பது இறந்தவர்களின் எலும்புகளை வைத்துக் கொண்டு, அவருடைய ஆவி நல்லுலகம் அடையத் தங்களின் பண்டிகைக்கு முன் கொண்டாடப்படுகின்ற ஒரு சிறு சாவு விழா. இதனை நாம் ஒராண்டுக் கழித்து இறந்த வருக்குச் செய்கின்ற திவசத்திற்கு ஒப்பிடலாம்.