பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கோத்தர்களின் உறவுமுறைச் சொற்கள் கோ. சுப்பையா எம். ஏ., கோத்தர்கள் எனும் பழங்குடி மக்கள் நீலகிரியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது பழக்க வழக்கங்களும், மொழியும் மற்றப் பழங்குடி மக்களினின்றும் வேறு பட்டவை ஆகும். இவர்கள் தங்களது மொழியை, 'கோன் மான்த்" என அழைக்கின்றனர். இவர்கள் பேசும் கோத்த் மொழி தென் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த் தாகும். மானிடவியலாரில் சிலர் இஃது கன்னட மொழியின் கிளைமொழி எனக் கூறியுள்ளனர். ஆனால், பேராசிரியர் எமனோ அவர்களது ஆய்வினின்றும்,' என்னுடைய மொழி ஆய்வினின்றும் இஃது தனித் திராவிடமொழி என்றும், எம்மொழியின் கிளைமொழியல்ல என்றும் தெரியவருகின் றன. இவர்களிடையே நிலவும் உறவு முறையை (Kinship)ப் பற்றி இவண் காண்போம். - இரத்தக் கலப்பாலும், பெற்றோர் கால்வழியாலும், மணவுறவினாலும், ஒரே குழுவினர் ஒரே இடத்தில் வாழும் தன்மையாலும் உறவு முறை அமைகிறது. சமுதாயத்தில் சமுதாய நடைமுறை அடிப்படையில் இருந்து எழுவது தான் உறவுமுறைப் பெயர்கள் என டாக்டர் ரிவர்ஸ் கூறுகிறார்கள். சமுதாயத்தில் ஓரின மக்களின் பண்பாட்டு வரலாற்றை எடுத்து இயம்புவதற்கு உறன்முஇைப் ப்ெயர் கள் பெரிதும் பயன்படுகின்றன என டாக்டர் ஐராவதி கர்வே கூறுகிறார்கள்.