பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗器 உதாரணமாகக் கீழேயுள்ளவற்றைக்காணலாம். பெண்.: அயோ நீம் இய்க்வாம். 'ஓ! அப்பா! நீங்கள் இங்கே வாருங்கள்!' ஆண்: அயா நீம் இய்க்வாம். "ஓ! அப்பா! நீங்கள் இங்கே வாருங்கள்!' ஆண்-பெண்:கரானே நீ ஒகாதி: 'ஏ! தம்பி நீ போகாதே!' இவ்வாறு விளியுருபைப் பயன்படுத்தும் தன்மை குறிப்பிடத்தக்கது. மற்ற கோகாலில் தனக்கு உறவினர்கள் இல்லை யெனில், அக்கோகாலில் உறவு முறையை ஏற்படுத்திக் கொள்ளலாம். எப்படியெனில், கோத்தர் ஒருவரின் முழங் காலைத் தொட்டுத் தம் நெற்றி அவருடைய முழங்காலில் படும்படி வணங்குவார். அவரும் இதைப்போல் செய்வார். இப்படி அவர்கள் செய்யின் அவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் போல் கருதப்படுவார்கள். இதற்குப் பின் அவ்விருவரும் ஒரே வீட்டில் மணம் செய்து கொள்ள லாம். இத்தகைய உறவு முறையை 'கசள்’’ என்று அழைக் கின்றனர். இத்தகைய வழக்கம் நீலகிரியிலுள்ள மற்ற பழங் குடி மக்களிடையே இல்லை என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். கோத்தர்களது சமுதாய அமைப்பினை அறிவ தற்கும் ஆராய்வதற்கும் உறவுமுறை பெரிதும் பயன்படு கின்றது. அடிக் குறிப்புகள் 1. கோ. சுப்பையா-கோத்தர்கள்-ஓர் அறிமுகம்-69 மதுரை-1