பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ழ்நாட்டுப் பளியர்கள் §: 5. த ஆ. சிவசுப்பிரமணியன் தமிழ் நாட்டின் மலைகளில் சில மக்கட் குழுக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் வளர்ச்சி குன்றிய பொருளா தார பண்பாட்டு நிலைகளில் உள்ளார்கள். தமிழ் நாட்டில் கற்கால நிலையிலிருந்து, நில உற்பத்தி முறைக்கு மக்கள் குழுக்கள் வளர்ச்சியுற்ற காலத்தில், வரல்ாற்று வெள்ளப் போக்கிலிருந்து ஒதுக்கிச் சிற்சில குழுக்கள் தனிமைப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டு களாக வளர்ச்சி குன்றிய நிலையில் தேங்கி விட்டன. இவர்களில் பளியர்கள் உணவு தேடும் நிலையில் இருக் கிதார்கள். தற்கால மனிதனுக்கும் இவர்களுக்கும் உள்ள வேறுபாடு, இவர்கள் இரும்புக் காலத்தில் வாழ்வதுதான். இவர்கள் இரும்டை உணவு உற்பத் திக்குப் பயன் படுத்தவில்ல்ை, அதனால் உற்பத்தி சக்திகளை வளர்த்துக் கொள்ள முடியவில்லை. இன்னும், உணவு தேடும் நிலையிலிருந்த நாகரிக ஆரம்ப வளர்ச்சிப் பண்பாட்டு நிலையில் உள்ளார்கள். இவர்கள் முன்னேற உணவு தேடும் நிலையிலிருந்து, இனவு உற்பத்தி நிலைக்குப் படிப்படியாக மாறு வேண்டும். அதற்கு அவர்களுடைய உற்பத்திச் சக்தி களின் வளர்ச்சியை வேகமாக்க வேண்டும். அiர் களுடைய இந் நிலைக்குக் காரணம், ஒரு வழிப் போக் கான சமுதாய வளர்ச்சியில் அவர்களுடைய உற்பத்திச் சக்திகள் மெதுவாக வளர்ந்ததேயாகும். நேரடி ஆய்வு கள் மூலம் கிடைத்த உண்மைகளை, மானிடவியல் அறிவையும், மார்க்சீய முறையியலையும் பயன்படுத்தி ஆ. சிவசுப்பிரமணியன் ஆரர்ய்கிறார். -பதிப்பாசிரியர்}