பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 0 : திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங் களின் மேற்குப் பகுதியிலுள்ள மலைத் தொடர்களில், பளியர்கள் என்னும் இனக்குழு மக்கள் வாழ்கிறார்கள். சில இனக்குழு மக்களைப் போல இவர்களுக்குத் தங்கள் பூர்வீகத் தைப் பற்றிய புராண வரலாறு எதுவும் கிடையாது.தங்கள் முன்னோர்கள் யாவரும் பரம்பரையாகக் காட்டுப் பகுதி களில் வாழ்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறொன்றும் இவர்களுக்குத் தெரியாது. இனி, பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள இவர்களது சமுதாய வாழ்க்கையினையும், பொருளாதார வாழ்க்கையினையும் காண்போம். 1 : 0 பிறப்பு : கருவுற்ற பளியப்பெண்ணைப் பேறு நரம் நெருங்கியதும், பேறுகாலத்திற்கென்று உள்ள க்குடிசையில் இருக்கச் செய்துவிடுவர். குழந்தை ன் குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்டுவார்கள். எட்டு நாள்கள் அல்லது பதினாறு நாள்கள் வரை தாயும், சேயும் அக் குடிசையில் தனித்திருக்க வேண்டும். 1 : குழந்தை பிறந்து ஒன்பது அல்லது பதினேழாவது நாளில் தாயையும், குழந்தையையும் தங்கள் குடிசைக்கு அழைத்து வருவார்கள். அன்று தாயும், சேயும் வெந்நீரில் குளிப்பார்கள். இதனை வீடு கூட்டுதல்' என்று கூறுவார் கள். அன்று வீட்டில் வழக்கமான உணவைத் தவிர வேறு சிறப்பான உணவு எதுவும் கிடையாது. ஒரு வருடம் கழித்த பின்னரே குழந்தைக்குப் பெயரிடுவர். 2 : பூப்பெய்துதல் பெண் பூப்பெய்தினால் பத்து அல்லது பதினைந்து நாள்கள் தனிக் குடிசையிட்டு அதில் இருக்கச் செய்வார்கள். பெண்ணின் தாயோ, உறவின்னான வேறு கொண்னோ துணையாக இருப்பார்கள், பதினொன்று அல்லது பதினாறாவது நாள் பெண்ணை வீட்டுடன் த்துக் கொள்வார்கள். அன்று அரிசிச்சோறு சமைத்து விருந்து நடக்கும். உறவினரும், ஊராரும் அரிசி அல்லது காய்கறிகள் கொண்டு வருவர். வத்த விருந்தினர்கள் 為 亨翠翠一針