பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 புது வேட்டியைத் தரையில் விரித்து அதில் அமருகின்றார் கன். பூப்பெய்திய பெண்ணையும், பெண்ணின் முறை மாப் பிள்ளையையும் அருகில் உட்காரச் செய்து, பெண்ணின் தாயாவது, பெண்ணின் அத்தையாவது வெந்நீரை இருவர் தலையிலும் ஊற்றுகின்றார்கள். முறை மாப்பிள்ளை இல்லாவிட்டால் பெண்ணை மட்டும் தனியே உட்காரச் செய்து வெந்நீர் ஊற்றுகிறார்கள். இதன் பின், பெண் வழக்கம்போலக் குடும்ப வேலைகளில் ஈடுபடுகிறாள். - 2 மாதவிலக்கு ஏற்பட்டதும் மூன்று அல்லது நான்கு நாள்கள் பளியப்பெண் தனிக் குடிசையிலிருக் கின்றாள். இந்நாட்களில் அவள் சமையல் வேலைகளைச் செய்ய மாட்டாள். வீட்டிலுள்ள பிற பெண்களோ, ஆடவர்களோ இவ்வேலையைச் செய்வார்கள். வெந்நீரில் குளித்த பிறகு, பளியப்பெண் வீட்டிற்கு வருகிறாள். 3 : திருமணம்: இவர்களுடைய திருமணச் சடங்கு மிகவும் எளிமையானது. காதல் திருமணமும், பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணமும் இவர்களிடையே நடைபெறும். காதல் திருமணத்தைப் பெரியவர்கள் தடை செய்வது கிடையாது. இவர்களிடையே பாலிய மணமும், பலதார மணமும் உண்டு. 3 : திருமணம் நடைபெற என்று நல்ல நாள் பார்க்கும் வழக்கம் இவர்களிடையே இல்லை. திருமண நாள் குறித்தவுடன் உறவினர்களுக்கு இச்செய்தியினைச் சொல்லி அனுப்புவர். அவர்கள் தங்கள் சக்திக்கு ஏற்றபடி பணம், காய்கறி, கிழங்கு, அரிசி ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வருகிறார்கள். மணமகனையும், மணமகளையும் அருகில் அமரச் செய்து, பெண்ணின் தாய் பாசிமாலை ஒன்றைப் பெண்ணின் கழுத்தில் அணிவிப்பாள். தாலி கட்டும் வழக்கம் இவர்களிடையே இல்லை. வேறு எவ்விதச் சடங்குகளும் அதை நடத்துவிக்கும் புரோகிதர் களும் இவர்களிடத்தில் கிடையா. மணமகன் வீட்டார் மணமகளுக்கோ அல்லது மணமகள் வீட்டார் மணமக