பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&惠 துக்கே பணமோ, பொருளோ கொடுப்பது இல்லை. திருமண நாளன்று கூடப் புத்தாடை அணியாது பழைய உடைகளையே அணிந்திருக்கும் மணமக்களே அதிகம். 2 3 : 2 திருமணமான பின்னர்க் கணவனுக்கும், மன்ன விக்கும் பிணக்கு ஏற்பட்டால் இருவரும் பிரிந்து கொள்ள லாம். இதற்காகப் பிரிபவர் பனங் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இச் சமயங்களில் குழந்தை இருந்தால் அது கணவனிடமே இருக்கும். குழந்தையை மனைவி ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. விதவை மனமும் இவர்களிடையே உள்ளது. 4 : இறப்பு: இறந்தவர்களை இவர்கள் புதைக்கிறார் கள். உறவினர்கள் வந்த பின்பு பாடைகட்டி எடுத்துச் செல்வார்கள். இறந்தவருக்கு அவரது மகன் செய்ய வேண்டிய சடங்கு எதுவும் கிடையாது. இறந்தவருக்காக ஒப்பாரி பாடிப் புலம்புவதும் கிடையாது. புதைப்பதற் கென்று காட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தையே பயன் படுத்துகிறார்கள். 4 : ஒருவர் இறந்து ஆறு அல்லது ஏழு நாள்கள் கழித்துக் கருமாதி விசேடம் செய்வார்கள். தட்டாம்பயிறு, பாசிப்பயிறு போன்ற பயிறு வகைகளை அவித்து உறவினர்க் கும், ஊரார்க்கும் கொடுப்பார்கள். 5 : 0 தெய்வவழிபாடு: காட்டுப்பளிச்சி, கருப்பசாமி, ஐயனார், முருகன் ஆகிய தெய்வங்களை வணங்குகின்றார் கள். வேலவர்சாமி, வேலப்பசாமி என்று முருகனை அழைக் கின்றார்கள். இவர்களுடைய அன்றாட வாழ்வில் கடவுளை வனங்கும் வழக்கம் பெரும்பாலும் இல்லை. எப்போ தாயினும் நினைத்துக் கொண்டால் கடவுளை வணங்குவர். ஆண்டிற்கு ஒரு முறை விழாக்கள் நடத்தும் வழக்கம் இவர் களிடம் கிடையாது. இராஜபாளையம் நகரிலிருந்து 8 மைல் தொலைவிலுள்ள ஐயனார் கோவில் அருவியிலிருந்து, நான்கு மைல் தூரத்தில் வழுக்கப்பான்ற என்னும் இடத்தில்