பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&全 வேலப்பர்சாமி கோயில் ஒன்று உள்ளது. அதற்கு எப்பொழு தாவது தேங்காய், பழம், அவல், பூ ஆகியவற்றைப் படைத்து வழிபடுவர். கோழி, ஆடு ஆகியனவற்றை வெட்டிப் பலிகொடுத்தும் வணங்குகிறார்கள். இது சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் முருக வணக்கத்தினை தினைவூட்டுகின்றது. மொத்தத்தில் கடவுள் வழிபாடு இவர்கள் வாழ்வில் ஒரு முக்கிய அம்சமாக இல்லை. 8 : உணவு: பளியர்களின் முக்கிய உணவு அரிசி யாகும். இதனை அவர்கள் பெரும்பாலும் கூலியாகப் பெற்றுக் கொள்கிறார்கள் சில வேளைகளில் ஊர்ப்பகுதிக் வந்து பணம் கொடுத்து வாங்குவர். இது தவிர நூலாம் படை, வெற்றிலை, வள்ளி, முள்ளுவள்ளி, பிள்ளைவள்ளி, தானவள்ளி, கமல் வள்ளி. கருவள்ளி என்னும் பெயர்களை புடைய காட்டில் இயற்கையாகக் கிடைக்கும் கிழங்குகளை அகழ்ந்தெடுத்து அவற்றை வேகவைத்தும், சுட்டும் உண்ணு கிறார்கள். பனங்கிழங்கை மட்டும், தங்கள் குடியிருப்பில், பனங்கொட்டைகளை ஊன்றி வளர்ப்பதன் மூலம் பெற்றுக் கொள்கிறார்கள். வேட்டையாடத் தெரியாததால் இவர்கள் உணவில் இறைச்சி அவ்வளவாகக் கிடையாது. காட்டி லுள்ள செந்நாய்கள், மான் போன்ற விலங்குகளை வேட்டையாடித் தின்று கொண்டிருக்கும்போது அவற்றை விரட்டிவிட்டு அவ்விறைச்சியை எடுத்துக் கொள்வார்கள். அல்லது நீர்திலைகளில் கிடக்கும்; செந்நாய்கள் தின்று விட்டுப்போன இறைச்சித் துண்டுகளை எடுத்து வந்து சமைத்து உண்பர்.” 8 : 1 வேட்டியை நீரோடைக்குள் விரித்துப் பின் அதனைக் கொஞ்சம் கொஞ்சமாய் மடித்து, நீருக்கு வெளியே எடுத்து அதில் சிக்கியுள்ள மீன்களைச் சேகரித்து உணவாகக் கொள்வர். இரவு சமைக்கும்போது மறுநாள் காலைக்கும் சேர்த்துச் சமைப்பார்கள். இரவில் சமைத்த உணவை மறு நாள் காலையில் உண்டுவிட்டுச் சுமார் ஏழு மணிக்கு வேலைக்குச் செல்வார்கள். பெரும்பாலும் நண் பகலில் உணவு உண்பது கிடையாது.