பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&5 7 : 0 தொழில்: காட்டிலுள்ள மரங்களின் பழங்களை யும், தேனையும் சேகரிக்கும் உரிமையினை அரசாங்கத்தார் தனிப்பட்டவர்க்கு ஏலம் விடுகின்றனர். இவ்வாறு ஏலம் எடுத்தவர்கள் பளியர்களை இவ்வேலைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 7 : இம்மலைகளில் கடுக்காய், பூந்திக்காய் (நெக்கட் டான் காய்) குங்கிலியம் ஆகியவற்றைச் சேகரிக்கும் வேலை யில் இவர்கள் ஈடுபடுகிறார்கள், இவ்வேலைக்குப் பளிப் பாட்டம்' என்று பெயர். காலை ஏழு மணிக்கு வேலைக்குச் செல்லும் இவர்கள் மாலை 4 அல்லது 5 மணியளவில் இருப்பிடம் திரும்புகிறார்கள். இதற்குக் கூலியாக ஆணுக்கு முக்கால் படி அரிசியும், பெண்ணுக்குக் காலேயர்ைக்கால் படி அரிசியும் கொடுக்கப்படுகிறது. வேலையின் தன்மை, வேலை செய்யுமிடம், வேலை செய்யும் கால அளவு ஆகிய வற்றை நோக்கும்போது இது மிகவும் அற்பமான கூலி யாகும். 7 : 2 மலையிலுள்ள உயரமான பாறைகளிலும், ஆழ மான பள்ளத்தாக்குகளிலும் உள்ள தேன்கூடுகளிலிருந்து தேன் சேகரிக்கும் பணியிலும் இவர்கள் ஈடுபடுகிறார்கள். புகையூட்டித் தேனீக்களை விரட்டித் தேனெடுக்கிறார்கள். கருங்கொடி என்னும் நீண்ட காட்டுக் கொடியை வளையங் களாக முடிச்சுக்கள் போட்டு, ஒரு நுனியை மேலே உள்ள மரத்திலோ, பாறை இடுக்கிலோ கட்டிவிட்டு அவ்வனை யங் களில் கால் வைத்து இறங்கித் தேனெடுக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான பணியாகும். கொடி அறுந்தோ: தேனீக்கள் கொட்டி கைப்பிடி விட்டே இவர்கள் கீழே விழுந்தால் இவர்கள் உடலை மேலே எடுக்கக்கூட முடி யாது. இப்படி ஆபத்தான சூழ்நிலையில் இவர்கள் எடுக்கும் ஒருபடி தேனுக்குக் கூலியாக குடி இரண்டு ெ படுகிறது. குத்தகை எடுத்தவர் . பன்னிரண்டு ரூபாய்க்கு வியாபாரிகளுக்கு ே