பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

役静 .ழுது பயிர் செய்யும் வழக்கம் இவர்களிடமில்லை. காட்டு நிலத்தில் பயிர் செய்து பார்த்த சில பளியர்களும், யானைக்கூட்டங்களினின்று பயிரைப் பாதுகாக்க வழி யின்றிப் பயிர் செய்வதை கைவிட்டு விட்டனர். 7:4 “பளிப்பாட்டம் இல்லாதபோது இவர்கள் வாழ்க்கை மிகவும் இரங்கத்தக்க நிலையில் இருக்கும், காடு களிலுள்ள கிழங்குகளைத் தேடி அலைவார்கள். இதற் ஆாக ஐந்து மைல் தூரம்கூடச் செல்வார்கள். செந்நாய் கடித்த இறைச்சியோ, கிழங்குகளோ கிடைக்காவிடில் அன்று முழுதும் பட்டினிதான். 8:( சமகாத்தம்: சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களில் சில பகுதியினர் கத்தோலிக்கக் கிறித்தவர்களாக மாறியுள்ளனர். பூரீவில்லிபுத்துரர், வாசுதேவ நல்லூர், புளியங்குடி ஆகிய ஊர்களினருகிலுள்ள காட்டுப்பகுதியில் உள்ள பளியர்கள் இவ்வாறு சமய மாற்றமடைந்துள்ளனர். இச் சமய மாற்றம் இவர்களது வாழ்க்கையில் சில மாற்றங் களை ஏற்படுத்தியுள்ளது. இவர்களிடையே உள்ள பலதார மனம் தடை செய்யப்பட்டுள்ளது. திருமணத்தில் சிலுவைத் தாவியினை மணமகள் கழுத்தில் மணமகன் கட்டுகிறான். ஆயினும், இந்து சமயத்திலுள்ள பளியர்களும், கத்தோலிக்கச் சமயப் பளியர்களும் திருமண உறவு கொண்டுள்ளனர். திருமணத்திற்குச் சமயம் தடையாக இல்லை. 8:1 இவர்களைச் சமய மாற்றம் செய்த கத்தோவிக்கப் பாதிரியார் அரசாங்கத்தாரிடம் முறையிட்டுக் காட்டில் பயிரிட நீலம் வாங்கிக் கொடுத்துள்ளார் என்றாலும் காட்டு மிருகங்களின் தொல்லையால் இவர்கள் அதில் பயிர் செய்ய வில்லை. தற்பொழுது இவர்களது பிள்ளைகளை அநாதை விடுதிகளில் சேர்த்து இலவசமாக உணவும், உடையும் கொடுத்துக் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்து சமயப் பளியர்களை விடத் தோற்றத்திலும் பழக்கவழக்கங்களிலும் சற்று நாகரிகமடைந்தவர்களாக, கத்தோலிக்கப் பளியர்