பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 காணப்பட்டாலும், பொருளாதார வாழ்வில் ஒன்று போலவே உள்ளார்கள். 9:0 முன்னேற்றத்திற்குச் செய்ய வேண்டுவன: பளியர்களின் வாழ்க்கைமுறை வளர்ச்சியடைந்த உற்பத்தி முறை எதனோடும் தொடர்புடையதல்ல. கடப்பாறை, அரிவாள், மண்வெட்டி, சிறுகோடாவி ஆகியவை தவிர வேறு உற்பத்திக் கருவிகள் எதுவும் இவர்களிடம் கிடை யாது. இவர்கள் எதனையும் உற்பத்தி செய்வது கிடையாது. உணவுப் பொருட்களைத் தேடிப் பெற்றோ, மலைபடு பொருட்களைச் சேகரித்துக் கொடுப்பதால் கிடைக்கும் கலி யினைப் பெற்றோ வாழ்க்கையினை நடத்துகிறார்கள். சுருங்கக் கூறின் நாகரிகமடையாத உணவு தேடி வாழும் garāgap to #567 roof (Food gathering tribe) quirpäpirrí. கள். இவ்வாழ்க்கை முறையின் காரணமாகவே இவர்கள் பெருங் கூட்டமாக ஒரே இடத்தில் வாழாது மிகவும் சிறிய குழுக்களாகப் பிரிந்து வாழ்கிறார்கள். 9:1 இவர்களின் வாழ்க்கை முறை மாறினால் ஒழிய இவர்கள் முன்னேற வழியேதுமில்லை. அரசாங்கம் இவர் களுக்கு மலைப்பகுதிகளில் குடியிருக்க வீடுகளும், குடிநீர்க் கிணறுகளும் அமைத்துக் கொடுத்துள்ளது. ஆனால் பல வீஇ களின் ஒடுகள் காற்றில் பறந்து விட்டன. சில வீடுகள் இடிந்து விட்டன. சில கிணறுகளின் கைப்பிடிச் சுவர்கள் இடிந்து துணர்ந்து விட்டன. 9:2 இதனால் மட்டும் இவர்கள் வாழ்க்கையை மாற்றி விட முடியாது. இவர்களின் பொருளாதார வாழ்க்கையில் மாற்றம் செய்ய வேண்டும். முதலில் மலைபடு பொருட் களைக் குத்தகைக்கு எடுக்கும் குத்தகைதாரர்களின் சுரண்டலினின்றும் இவர்களைப் பாதுகாக்க வேண்டும். குத்தகை உரிமையைப் பளியர்களுக்குப் படிப்படியாக அளிக்க முயற்சி செய்ய வேண்டும். குத்தகை முறை ஒழிக்கப் படும் வரை, குத்தகைதாரர்கள் இவர்களுக்குக் கொடுக்க ஒரு குறைந்தபட்சக் கூலியினை நிர்ணயம் செய்ய வேண்டும்.