பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நரிக்குறவர்களின் வாழ்க்கை முறை கோ. சீனிவாசவர்மா M.A. Ph. I) (கம் நாட்டில் பிற பண்பாட்டையுடைய சில இனக்குழுக்கள் (Tribal groups) உள்ளன. மானிட வியலாரைவிட மொழியியலாரே இக் குழுக்களைப் பற்றி ஆராய்கின்றனர். 'ஆராய்ச்சி பத்திரிகை யின் இந்த இதழில் மட்டும் மூன்று மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் தாம் ஆராயும் மொழி பேசும் மக்களது வாழ்க்கை முறைபற்றி ஆராய்ந்துள்ளனர். தற்கால பண்பாட்டு, பொருளாதார ஊடுருவலைப் பற்றித் தனியாக இனிமேல்தான் ஆராயவேண்டும். இவ்விதழில் வெளியாகும் ஆய்வுக்கட்டுரைகள். ஆரம்ப ஆய்வு முயற்சிகள். இதற்கு முன் இத்துறையில் விஞ்ஞான் பூர்வமான உற்றுநோக்குக் கட்டுரைகள் அதிகமாக வெளியிடப் படவில்லை. இனக்குழுக்களை (Tribes) ஆராய்வதுதான் மானிடவியல் ஆராய்ச்சியின் எல்லையென்ற கருத்து இன்று பரவுகிறது. இது தவறானதாகும். இனக்குழு மாறி புதிய வளர்ச்சி பெற்ற சமுதாயத்தில் உறுப்பாகும். வரலாற்று ரீதி யாகத் தற்காலச் சமுதாயத்தின் உறுப்புகளையும் இவற்றின் நடைமுறைப் பண்பாட்டையும் அறிய வேண்டுவது அவசியமாகும். இவ்விதழில், நரிக்குறவர், கோதர், தோதவர் ஆகிய மூன்று இனக்குழு மக்களின் வாழ்க்கைமுறை பற்றிக் கட்டுர்ைகள் வெளியாகின்றன. தோடர்களைப் பற்றி எழுதியவர் மானிடவியல் ஆராய்ச்சியாளர் சக்திவேல் அவர்கள். நரிக்குறவர் களைப்பற்றி எழுதியவர் டாக்டர் சீனிவாசவர்மா, குடவர்களைப் பற்றி எழுதியவர் R., பாலகிருஷ்ணன். பின்னவர் இருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழ கத்தில் ஆர்ாய்ச்சிப் பணியிலீடுபட்டிருக்கிறார்கள். -பதிப்பாசிரியர்.