பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

கிடைக்கும்‌ என்று அறிவர்‌. எனவே அவர்கள்‌, மன்னனை மாமன்றத்தார்‌ தலையாட்டியாக்க விரும்பும்‌ கொடுமைப்‌ பற்றி உருக்கமாகக்‌ கூறி ஆதரவு திரட்டி பார்த்தனர்‌. படை வரிசையிலேயும்‌ இந்தப்‌ பிரசாரம்‌ நடைபெற்றது.

ஆனால்‌ அரண்மனை, மாளிகை, பாசறை எங்கு இவ்‌விதமான சதி உருவாலும்‌, உடனுக்குடன்‌; மாமன்றத்‌துக்கு விஷயம்‌ எட்டிவிடும்‌—மாமன்றத்தின்‌ சார்பினர்‌, எங்கும்‌ இருந்துவந்தனர்‌. ஒரு சதியும்‌ கருவிலிருந்து வெளிவர இயலவில்லை, சிதைக்கப்பட்டது.

போப்பாண்டவரிடம்‌ உதவி கோரி எனிரிடாராணி புதிய முயற்சி செய்துவந்தார்‌. பிரிட்டனில்‌ கத்தோலிக்கருக்குச்‌ சலுகைகள்‌ அளிக்கப்படும்‌ என்று வாக்களித்து இந்த உதவி கோரப்பட்டது.

மக்கள்‌ வீரமாகத்‌ திரண்டு நின்றனர்‌, மாமன்றம்‌ விழிப்புணர்ச்சியுடன்‌ இருந்துவந்தது என்றாலும்‌, சிறிது அயர்ந்தால்‌, மன்னன்‌ சதிபுரிவான்‌ என்ற அச்சம்விட்டபாடில்லை. ஆதிக்க காலம்‌ போய்விட்டது, மக்கள்‌ விழித்‌துக்கொண்டனர்‌, இனி அவர்களிடம்‌ ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அலங்காரச்‌ சின்னமாக இருந்துவிடுவோம்‌ என்று தீர்மானிக்கக்‌ கூடியவனல்ல, சார்லஸ்‌; தத்துவவாதி!

படைகளை மாமன்றத்தின்‌ விருப்பமின்றி அமைத்தல்‌ கூடாது, போர்‌ தொடுத்தல்‌ மன்னனுடைய தனித்‌ தீர்‌மானமாக இருத்தலாகாது, வரிகளை, மாமன்ற ஒப்பமின்றி விதித்தலாகாது — என்று இந்த “கூடாது—ஆகாது” என்ற அந்தாதி குறையவில்லை.

மன்னன்‌ இந்நிலையில்‌, ஸ்காத்லாந்து செல்ல வேண்‌டியதாயிற்று-சமரசத்‌ திட்டம்‌ வகுக்க. மன்னன்‌ ஸ்காட்‌ மக்களுக்குச்‌ சலுகைகள்‌ தருவதென்றும்‌, அதற்கு ஈடாக