19
வனாக விளங்கினான் — அந்த அளவுக்கு ஆற்றலற்று விளங்கினவன், பக்கிங்காம்.
அவனுடைய பெருமைக்கு ஏற்ற அளவுக்குப் படை திரட்டப்படும் —அவனுடைய முரட்டுக் குணத்தின் விளைவாகப் போர் மூளும்—வெற்றி மட்டும் கிட்டாது!
அவன் கேட்டால், கப்பற்படை அமைக்கப்படும்—கலங்களில் தங்கநிறப் படுதாக்கள் அழகளிக்கும்—வெற்றி மட்டும் கிடையாது!
போரிலும் சரி, நிர்வாக முறையிலும் சரி, பக்கிங்காம் திறமையைக் காட்டியதில்லை. மக்கள் ஆச்சரியப்பட தக்க வெற்றிகள் ஏதும் பெற்றானில்லை, அவன் அடைந்த ஒரே வெற்றி, மன்னனிடம் கொண்டிருந்த மகத்தான செல்வாக்கு! மக்கள் எங்ஙனம் சகித்துக் கொள்வர்.
எலிசபெத் இராணியாரின் காலத்தில், பிரிட்டிஷ் கொடி, எங்கும் கெம்பீரமாகப் பறந்தது. 1588-ல் இங்கிலாந்தை அழித்தொழிக்கும் நோக்குடன் கிளம்பிய ஸ்பெயின் நாட்டுப் பெருங் கப்பற்படையைச் சின்னாபின்னமாக்கி, பிரிட்டன் வெற்றிக்கொடி நாட்டிற்று! ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், பிரிட்டனுடைய வல்லமையை வியந்தன. அப்படிப்பட்ட பிரிட்டன், பக்கிங்காம் காலத்தில், லாரோகேல் கோட்டையைக் காப்பாற்ற பிரொன்சுடன் தொடுத்த கடற்போரிலே, கேவலமாகத் தோற்றது! கடலிலே பிரிட்டிஷாரின் பிணங்கள் மிதந்தன! கலங்கள் சுக்கு நூறாகிக் கடலடி சென்றன! போர்த் தளபதி பக்கிங்காம்!!
ஒரு நாட்டு மக்களின் வெறுப்பைக் கிளறக்கூடிய குணமும், செயலும் எவை எவையோ, அவை யாவும் நெளிந்தன பக்கிங்காமிடம். எனினும், ஜேம்ஸ் மன்னன்