20
செல்லப்பிள்ளே என்றான், சார்லஸ் மன்னன், இணைபிரியாத் தோழன் என்றான், மக்கள் எவ்வளவு மனக்கொதிப்படைந்திருப்பர்!
ஜேம்ஸ் மன்னன் காலத்திலேயே இந்த வெறுப்பை மக்கள் காட்டினர்; மன்னன் புருவத்தை நெறித்தான் — புன்னகையுடன் கூட அல்ல, பதிலளித்தது. “ஏசுவுக்கு, ஒரு ஜான், எனக்கு ஒரு ஜார்ஜ்” என்று ஆணவம் பேசினான்.
பிரிட்டிஷ் மக்கள், மன்னராட்சிமுறை, மக்களின் உரிமைத்தனத்துக்கு ஊறு தேடுவது, முரணானது என்று எண்ணிக்கொண்டு, விவாதம் நடத்தி வந்தவர்களல்ல. உள்ளூர, மக்களுக்கு, மன்னராட்சி முறை ஒரு தேவையான ஏற்பாடு என்ற எண்ணம் பலமாக இருந்து வந்தது. ஆனால் அவர்கள் உள்ளத்திலே மற்றோர் எண்ணம் உறங்கிக் கிடந்தது — மன்னராட்சி முறை தேவைதான், அதனை ஏற்படுத்தியதும் மக்கள்தான் — என்பது அந்த எண்ணம். மக்கள் விரும்பி, மன்னனை ஆளச் சொல்கிறார்கள்—எனவே, மூல உரிமை மக்களுடையது — ஆற்றலுக்காகவோ, அறிவுக்காகவோ, இவை அற்றவனாக இருப்பினும் பரம்பரைக்காகவோ, மன்னன் என்றோர் சின்னப் பொருள் இருக்கட்டும் என்று மக்கள், ஒரு ஏற்பாடு செய்தனர்—மக்கள், மன்னனுக்கு அதிகாரமளித்தனர். எனவே, மன்னன் தனக்குக் கிடைத்துள்ள பெரும்பதவி, மக்களிடமிருந்து கிடைத்தது என்ற உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். பதவியைப் பறித்துவிடும் உரிமை மக்களுக்கு இருக்கிறது என்ற அச்சம் கொண்டவனாக இருக்கவேண்டும், பெரும்பதவி தந்ததற்கு நன்றியறிதலுடன் நடந்துகொள்வதுடன், மேலும் மேலும் மக்களுடைய அன்பைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும், மக்களின் நலனைக் காக்கவேண்டும்–இதுவே