பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

மன்னர்‌ அமர்த்திக்கொள்வான்‌. ஆண்டவனுக்குச்‌ சமானம் அரசன். ஆகவே, ஆகுமா இந்த அக்ரமம்‌ என்று கேட்கக்கூடாது; கேட்பது நாத்திகத்துக்கு ஒப்பாகும்‌; அறமறிந்துரைப்பார்‌ ஒருவர்‌, அரசன்‌ ஆணைக்குக்‌ குந்தகம் விளைகிறது என்று அவரை விரட்டுவான்‌ மன்னன்‌, இதென்ன அக்ரமம்‌ என்று கேட்கலாகாது; வெளிநாடுகளின்‌ பகையைக்‌ காரணமற்றுக்‌ கிளப்புவான் மன்னன், ஏன் என்று கேட்கக்கூடாது. ஏளனம்‌ ஏற்படும் விதமான தோல்வி நேரிடும், ஐயோ! என்று ஆயாசப்‌படக்கூடாது, ஏனெனில் இவை அரச காரியங்கள், அரசனோ ஆண்டவனின் அருள் பெற்றவன்!

இந்தத்‌ தத்துவத்தைத்‌ தகர்த்தெறிந்தாலன்றி, தன்மானம்‌ நிலைக்காது, உடைமை, உரிமை எதுவும்‌ இருக்‌காது, என்பதை எண்ணும்போதே, மக்கள் கொதிப்படைந்‌தனர்‌. மக்களின்‌ உரிமைகளைக்காக்க ஏற்பட்ட சட்டங்களைக்‌ காட்டினால்‌, மன்னன்‌, அது என் இஷ்டத்தால்‌ இருக்கும்‌ ஏடுகள்‌, விரும்பினால்‌, மாற்றி விட முடியும் என்கிறான், மக்களின்‌ உரிமைகளை மன்னனுக்கு எடுத்துரைக்கவும், மன்னனுடைய கடமைகளை அவனுக்கு நினைவுப்படுத்தவும், மன்னனுடைய செயல்களை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை எடுத்துக்கூறவும், மன்னன் இன்னின்ன காரியமாற்ற வேண்டும் என்று அறிவிக்கவும்‌, ஆற்றல் பெற்ற (பார்லிமெண்ட்‌) மாமன்றம், இருப்பதைக் கூறினால், "மாமன்றமா! என்றுரைக்கிறான். மக்களுக்கு வேறு பாதுகாப்பளிக்கும் சாதனம் என்ன? என்று எண்ணலாயினர்! மக்கள் கரமும் மன்னன் சிரமும்—என்ற தொடர் மொழிமீது, எண்ணம் பாய்ந்தது. மன்னன், விளக்கமுரைத்துவிட்டால். மக்கள் தமது நிலை அறிந்து பணிந்து கிடப்பர், என்று