பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

சரக்குகளின்மீது ஏற்றுமதி இறக்குமதி வரிவிதித்‌தான் மன்னன் இது எலிசபெத்‌ இராணியார்‌ விதித்தபோதே சிறிதுகுமுறல்‌ இருந்தது, மக்கள்‌ மனக்குறையை அறிந்து, இந்த வரி முறையிலே மாறுதல்‌ செய்ய எலிசபெத்‌ உட்பட்டதுண்டு. ஜேம்ஸ்‌ இந்த வரியை விதித்தும்‌ மாமன்றத்தின்‌ அனுமதியின்றி வரி விதிப்பது அடாது என்ற கண்டனம்‌ பிறந்தது. மக்களின்‌ எழுச்சியின்‌ துவக்கக்‌ கட்டம்‌ அது, எனவே கண்டனம்‌ பிறந்தபோதிலும்‌, மன்னனால்‌ வரியை வசூலிக்க முடிந்தது. பேட்‌ என்ற ஒரு வியாபாரி துணிந்து, இந்த வரியைக்‌ கட்ட முடியாது என்று கூறி வழக்காடினான்‌. அரசனுடைய ஆணைக்கு அடங்கிய நீதிபதிகள் துறைமுகப் பட்டினங்களெல்லாம் அரசனுக்குச் சொந்தமானவை, எனவே அங்கெல்லாம்‌, சரக்குகள்‌ நுழைவதற்கும்‌, மக்கள்‌ செல்வதற்கும்‌ மன்னனுடைய அனுமதி தேவை; இதற்காக மன்னன்‌ கட்டணம் கேட்கலாம்‌; வரி வசூலிக்கலாம்‌. அனுமதி தரக்‌ கூட மறுத்தேவிடலாம்‌, என்று தீர்ப்பளித்தனர்‌. மன்னன்‌ மகிழ்ந்தான்‌. மக்கள்‌ இந்தத்‌ தீர்ப்பு எவ்வளவு கேடான விளைவுகளைத்‌ தரவல்லது என்பதை எண்ணி வருந்தினர்‌. பிரிட்டன்‌ வெளிநாடுகளுடன்‌ வியாபாரம்‌ செய்துவந்தது செழிப்பான வியாபாரம்‌; எனவே துறைமுக வரிபோட்‌டால்‌, தொகை தொகையாக வரி குவியும்‌; இதனை மாமன்‌றத்தின்‌ உதவியின்றி மன்னன்‌ பெறமுடியுமென்றுல்‌, பிறகு மாமன்றத்தை ஏன்‌ மதிப்பான்‌, மாமன்றம்‌ மதிப்‌பிழந்தால்‌, மக்களின்‌ உரிமை என்ன கதி ஆவது! இதை எண்ணி மக்கள்‌ மருண்டனர்‌, மன்னனோ ஆண்‌டொன்றுக்கு எழுபதினாயிரம்‌ பவுன்‌ வரி வருமானம்‌ கிடைப்பதறிந்து மகிழ்ந்தான்‌.

இந்த வெற்றி, மன்னனுடைய ஆணவத்தையும்‌ மக்களுடைய அச்சத்தையும்‌ வளர்த்தது, ஆனால்‌ பிரச்னை