30
ஆசாரக்கட்சி ஒன்று. அரசமார்க்கத்தை அப்படியே பின்பற்றும் கட்சி மற்றொன்று. இரண்டுக்கும் இடையே கசப்பு, கிலேசம் சந்தேகம்.
ஆசாரக்கட்சிக்கும் மற்றதுக்கும் இடையிலே, அடிப்படையான கொள்கை மாறுபாடு ஏதும் கிடையாது. எனினும் இரு பிரிவுகளும் விரோதம் பீறிட்ட வண்ணமிருந்தது. தொழுகை முறையிலே சில வேறுபாடுகள், துதிபாடுவது பற்றிச் சில தர்க்கங்கள், இவைகளே வித்தியாசம், எனினும் இவை தலைபோகும் விதமானதாகக் கருதப்பட்டன. சங்கீதம், நாடகம், பொழுதுபோக்கு, வேடிக்கை, இவைகளெல்லாம் கூடாது, சன்மார்க்கத்தைக் கெடுத்துவிடும் என்பது ஆசாரக் கட்சியின் எண்ணம். எப்போதும் ஆண்டவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருக்கவேண்டும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து தேடிக் கெட்டலையலாகாது, அப்போதுதான் உள்ளத் தூய்மை ஏற்படும், தூய உள்ளத்திலேதான் ஆண்டவன் உறைவார், இந்தத் தூய்மையாளர்கள்! குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளிலே, வேடிக்கையான பொழுது போக்குகள் கண்டிப்பாக இருத்தலாகாது என்று வலியுறுத்தினர், அத்தகைய பொழுது போக்கிலே ஏதும் தவறு இல்லை, என்று வாதாடினர் அரசமார்க்கத்தினர், இந்த 'மாறுபாடு' ஒரு பிரிவை மற்றோர் பிரிவு, வெறுத்து, எதிர்க்கும் அளவுக்கு முற்றிவிட்டது.
இந்த மதத்துறைக் கட்சியினர் அனைவரும் ஒருவரை ஒருவர் பாபிகள் என்றும், வேதநிந்தகர்களென்றும், நாத்திகன் என்றும் கண்டித்துக்கொண்டனர்.
ஆச்சாரக் கட்சிக்காரன், பிராடெஸ்டெண்டின் மற்றோர் பிரிவினனையும் கத்தோலிக்கனையும், நாத்திகன் என்பான், பிராடெஸ்டெண்டோ, கத்தோலிக்கரை கர்த்-